இப்போது YouTube-ல் புதிய வசதி- பிரீமியம் உறுப்பினர்களுக்கு மட்டும் கிடைக்கும் அம்சம்
தற்போது கூகுள் நிறுவனம் யூடியூப்பில் புதிய வசதியை கொண்டு வந்துள்ளது.
கூகுள் நிறுவனம் யூடியூப்பில் லாக் ஸ்கிரீன் (lock screen) ஆப்ஷனை சோதனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அம்சம் iOS மற்றும் Android இரண்டிலும் கிடைக்கும். பிரீமியம் உறுப்பினர்கள் தற்போது சோதனையில் உள்ள இந்த அம்சத்தை விரைவில் பெறுவார்கள்.
முழுத்திரையில் (Full Screen) வீடியோவைப் பார்க்கும் போது பயனர்கள் இந்த அம்சத்தைப் பயன்படுத்தலாம். வீடியோவைப் பார்க்கும்போது வீடியோ மாறுவதையோ அல்லது உறைவதையோ தவிர்க்க Lock Screen அமைப்பு சோதிக்கப்படுகிறது.
TechCrunch
லாக் ஸ்கிரீன் பயன்படுத்தினால் வீடியோவைப் பார்க்கும்போது, தற்செயலாக இடைநிறுத்தப்படுவதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. சோதனைக்கான அணுகல் உள்ள பயனர்கள் இந்த லாக் ஸ்கிரீன் அம்சத்தை இயக்க, திரையின் மேல் இடது மூலையில் உள்ள கியர் ஐகானைத் தட்டலாம்.
யூடியூப் பயனர்களுக்கு இந்த அம்சத்தை முயற்சிக்க ஜூலை 30 வரை அவகாசம் அளிக்கிறது. யூடியூப் முகப்புப் பக்கத்திற்குச் சென்று பயனர்கள் தங்களுக்கு அழைப்பு வந்துள்ளதா என்பதைப் பார்க்க முடியும்.
YouTube-ன் இந்த புதிய பரிசோதனையானது Netflix 2020-ல் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு அம்சத்தைப் போன்றது. Netflix-ன் மொபைல் ஆப்ஸ் ஸ்கிரீன் லாக்கை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
யூடியூப் தற்போது வேறு சில சோதனைகளையும் நடத்திவருகிறது. முன்னதாக, விளம்பரத் தடுப்பான்களைத் தடுக்க யூடியூப் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியது. ஆனால் இனிமேல் அந்த விளம்பரத்தை கட்டாயம் பார்க்க வேண்டும் என்பது கூகுளின் ஆலோசனை. விளம்பரத் தடுப்பானை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தினால், நீங்கள் பார்க்கும் வீடியோக்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த கூகுள் முடிவு செய்துள்ளது.
யூடியூப் இணையதளம் அல்லது ஆப்ஸ் மூலம் பயனர்கள் கேம்களை விளையாட அனுமதிக்கும் ஆன்லைன் கேம் சலுகையையும் நிறுவனம் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |