யூடியூப் பார்ட்னர் புரோகிராமில் (YPP) புதிய மாற்றங்கள்: கிரியேட்டர்கள் உருவாகியுள்ள புதிய சவால்!
யூடியூப் வீடியோ தளத்தின் யூடியூப் பார்ட்னர் புரோகிராமில் (YPP) சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஜூலை 15, 2025 முதல் அமலுக்கு வரவுள்ளன.
இந்த அப்டேட்களின் முக்கிய நோக்கம், போலியான (inauthentic) மற்றும் மீண்டும் மீண்டும் பதிவு செய்யப்படும் (repetitive) உள்ளடக்கத்தைக் கட்டுப்படுத்துவதாகும்.
இது கிரியேட்டர்கள் தங்கள் வீடியோக்களுக்கான வருவாயை ஈட்டுவதில் புதிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
யூடியூப் பார்ட்னர் புரோகிராம் என்றால் என்ன?
கூகுள் நிறுவனத்திற்கு சொந்தமான யூடியூப், உலகளவில் 200 கோடிக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட மிகப்பெரிய வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாகும்.
இதில் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியினர் வீடியோக்களைப் பதிவேற்றி, யூடியூப் பார்ட்னர் புரோகிராம் மூலம் வருவாய் ஈட்டி வருகின்றனர். இந்தத் திட்டம் கிரியேட்டர்களுக்கு வீடியோக்களில் வரும் விளம்பர வருவாயில் ஒரு பங்கை வழங்குகிறது.
யூடியூப் பார்ட்னர் புரோகிராமில் இணைவதற்கு சில தகுதிகள் அவசியம். ஆரம்பத்தில் 500 சந்தாதாரர்கள் தேவை. 1,000 சந்தாதாரர்களைக் கடந்ததும், விளம்பர வருவாய் ஈட்டுவதற்கான தகுதியைப் பெற முடியும்.
இதன் மூலம் கிரியேட்டர்கள் தங்கள் வீடியோக்களுக்கு இடையே ஒளிபரப்பாகும் விளம்பரங்கள் வழியாக வருவாய் ஈட்டலாம். ஷார்ட்ஸ் வீடியோக்களுக்கும் வருவாய் ஈட்ட முடியும்.
2021 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில், உலகளவில் யூடியூப் சுமார் 70 பில்லியன் டாலர்களை கிரியேட்டர்களுடன் பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
யூடியூப் பணமாக்குதல் கொள்கைகளின் பரிணாம வளர்ச்சி
ஆரம்பத்தில், யூடியூப் வருவாய் பகிர்வு விவகாரத்தில் சப்ஸ்கிரைபர்கள் எண்ணிக்கை அல்லது வாட்ச் ஹவர்ஸ் போன்ற பெரிய கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாமல் இருந்தது.
இதனால், வைரல் உள்ளடக்கத்தை (viral content) பதிவேற்றுபவர்கள் எளிதாக வருவாய் ஈட்ட முடிந்தது.
இருப்பினும், 2018 ஆம் ஆண்டில், யூடியூப் கடுமையான விதிகளை அறிமுகப்படுத்தியது. 1,000 சந்தாதாரர்கள் மற்றும் குறிப்பிட்ட வாட்ச் டைம் போன்றவை கட்டாயமாக்கப்பட்டன.
இது அதிக பார்வையாளர்களைக் கொண்ட சேனல்களுக்கு சாதகமாக அமைந்தது. பின்னர் படிப்படியாக, அசல் தன்மை இல்லாத உள்ளடக்கங்கள், டெக்ஸ்ட்-டு-ஸ்பீச் (text-to-speech) மூலம் உருவாக்கப்பட்ட குரல் பதிவுகள் மற்றும் தானியங்கி (robotic) பயன்பாடுகளைக் கொண்டு உருவாக்கப்படும் வீடியோக்கள் போன்றவற்றுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
2025 இல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய மாற்றங்கள் இந்த கட்டுப்பாடுகளை மேலும் வலுப்படுத்துகின்றன.
யூடியூப் பார்ட்னர் புரோகிராமில் (YPP) புதிய மாற்றங்கள்
யூடியூப் வீடியோ தளத்தின் யூடியூப் பார்ட்னர் புரோகிராமில் (YPP) சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஜூலை 15, 2025 முதல் அமலுக்கு வரவுள்ளன. ////
இந்த அப்டேட்களின் முக்கிய நோக்கம், போலியான (inauthentic) மற்றும் மீண்டும் மீண்டும் பதிவு செய்யப்படும் (repetitive) உள்ளடக்கத்தைக் கட்டுப்படுத்துவதாகும். ////
இது கிரியேட்டர்கள் தங்கள் வீடியோக்களுக்கான வருவாயை ஈட்டுவதில் புதிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ////
புதிய மாற்றங்கள் என்ன?
புதிய அப்டேட்களின் மையமாக ஸ்பேம் உள்ளடக்கத்தை அடையாளம் காணுதல் உள்ளது.
யூடியூப் எந்தெந்த உள்ளடக்கங்களுக்கு பணமாக்குதல் இல்லை என்பதைத் துல்லியமாக விளக்கவில்லை என்றாலும், இது பின்வரும் உள்ளடக்க வகைகளைக் குறிவைப்பதாக கிரியேட்டர்கள் கருதுகின்றனர்.
ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட வீடியோக்கள் (AI-generated videos): ஜெனரேட்டிவ் ஏஐ (Generative AI) உள்ளடக்கங்களுக்கு வருவாய் ஈட்ட தடை விதிக்கப்படுமா என்ற கேள்வி கிரியேட்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஸ்பேம் உள்ளடக்கம்: தவறான தலைப்புகள் அல்லது டேக்குகளைக் கொண்ட வீடியோக்கள் இதில் அடங்கும்.
மீண்டும் மீண்டும் வரும் உள்ளடக்கங்கள் (Repetitive content): அசல் தன்மையற்ற, நகலெடுக்கப்பட்ட அல்லது பலமுறை மீண்டும் பதிவேற்றப்படும் வீடியோக்கள்.
ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட குரல் பதிவுகள் மற்றும் விஷுவல்களால் எழும் பதிப்புரிமை (copyright) மற்றும் சட்ட சிக்கல்கள் கூட இந்த புதிய அப்டேட்களுக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என சிலர் கருதுகின்றனர்.
கிரியேட்டர்கள் மீதான தாக்கம்
யூடியூப் பார்ட்னர் புரோகிராம் மூலம் வருவாய் ஈட்ட கிரியேட்டர்கள் அசல் உள்ளடக்கத்தை (original content) பகிர வேண்டும் என யூடியூப் தெளிவுபடுத்தியுள்ளது. இந்த புதிய அப்டேட் மீண்டும் மீண்டும் உருவாக்கப்படும் உள்ளடக்கங்களை திறம்பட அடையாளம் காணும்.
தொடர்ந்து அசல் உள்ளடக்கங்களை உருவாக்கும் கிரியேட்டர்களுக்கு இந்த மாற்றங்களால் பெரிய பாதிப்பு இருக்காது.
ஆனால், குறைந்த தரத்திலான, ஏஐ உதவியுடன் உருவாக்கப்பட்ட வீடியோக்கள் மூலம் அதிக சப்ஸ்கிரைபர்கள் மற்றும் வியூஸ்களைப் பெற்று வருவாய் ஈட்ட முயல்பவர்கள் பாதிக்கப்படலாம். புதிய அப்டேட் மூலம் இத்தகைய நடைமுறைகளை யூடியூப் உன்னிப்பாகக் கண்காணிக்கும்.
யூடியூபின் தொலைநோக்கு பார்வை
யூடியூப் கிரியேட்டர்கள் தங்கள் பார்வையாளர்களுக்கு தனித்துவமான, ஈர்க்கும் மற்றும் அசல் உள்ளடக்கங்களை வழங்க வேண்டும் என்று விரும்புகிறது.
இது ஒட்டுமொத்த தளத்தின் தரத்தை மேம்படுத்தும். மீண்டும் மீண்டும் வரும் மற்றும் ஸ்பேம் வீடியோக்களை வடிகட்டுவதன் மூலம், பயனர்கள் யூடியூப் தளத்தில் அதிக நேரம் செலவிடுவதையும், அதன் மூலம் விளம்பர வருவாயை அதிகரிப்பதையும் யூடியூப் நோக்கமாகக் கொண்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |