யூடியூப் Picture-in-Picture வசதி இனி அனைவருக்கும் கிடைக்கும்
யூடியூப் நிறுவனம் தனது புதிய Picture-in-Picture (PiP) வசதியை உலகளாவிய அளவில் அனைத்து iPhone மற்றும் iPad பயனர்களுக்கும் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுவரை இந்த வசதி அமெரிக்காவில் மட்டுமே, மேலும் Premium சந்தாதாரர்களுக்கே கிடைத்தது.
இப்போது, உலகம் முழுவதும் உள்ள சாதாரண பயனர்களும் நீண்ட வீடியோக்களை (non-music content) சிறிய சாளரத்தில் பார்த்துக்கொண்டே மற்ற செயலிகளை பயன்படுத்த முடியும்.
இந்த வசதி மூலம், யூடியூப் வீடியோவை சிறிய விண்டோவாக மாற்றி, திரையில் எங்கு வேண்டுமானாலும் நகர்த்திக் கொண்டு மற்ற செயலிகளை ஒரே நேரத்தில் பயன்படுத்தலாம்.

இதை செயல்படுத்த, யூடியூப் ஆப்பிலிருந்து வெளியேற swipe up செய்ய வேண்டும். அப்போது வீடியோ சிறிய சாளரத்தில் தொடர்ந்து இயங்கும்.
Premium Lite பயனர்கள் நீண்ட வீடியோக்களுக்கு மட்டும் PiP-ஐ பயன்படுத்தலாம். ஆனால் Premium சந்தாதாரர்களுக்கு இசை மற்றும் இசை அல்லாத அனைத்து வகை உள்ளடக்கங்களுக்கும் PiP வசதி கிடைக்கும்.
இந்த அப்டேட் அடுத்த சில மாதங்களில் உலகளாவிய அளவில் வெளியிடப்படும் என யூடியூப் தெரிவித்துள்ளது. இதன் மூலம், யூடியூப் பயன்பாடு மேலும் எளிமையாகவும் பயனுள்ளதாகவும் மாறும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
#YouTube #PiPMode #TechUpdate #iPhone #Android #YouTubePremium #GlobalLaunch #Multitasking