YouTube பார்வையாளர்களைத் கவரும் புதிய அம்சம்; இனி உங்களுக்கு போர் அடிக்காது!
வீடியோ பார்த்து சலித்துப்போன பார்வையாளர்களை தக்கவைக்கும் விதமாக YouTube கவர்ச்சிகரமான அம்சத்தை அறிமுகப்படுத்துகிறது.
YouTube உலகின் மிகவும் பிரபலமான வீடியோ ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்றாகும்.
பெரும்பாலும், பார்வையாளர்கள் நீண்ட நேரம் YouTube-ல் வீடியோவைப் பார்த்தால், சில நிமிடங்களில் சலிப்பு தட்டியதும் தளத்தை தவிர்க்கிறார்கள்.இப்படிப்பட்ட சலிப்புக்கு யூடியூப் புதிய தீர்வைக் கண்டுபிடித்துள்ளது.
YouTube அதன் செயலியில் கேம்களை விளையாட பயனர்களை அனுமதிக்கிறது. இதனால், கூகுள் ப்ளே ஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோரிலிருந்து கேம்களை பதிவிறக்கம் செய்ய வேண்டிய அவசியமில்லை, கேம்கள் YouTube செயலியில் உள்ளமைந்தே வழங்கப்படுகின்றன.
Playable
இந்த புதிய அமைப்பு Playable என்று அழைக்கப்படுகிறது. யூடியூப் பார்வையாளர்களில் 15 சதவீதம் பேர் கேம் ஸ்ட்ரீமிங்கிற்கு ஆதரவாக இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து இந்த புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு விளையாடக்கூடிய அம்சம் கிடைக்கும். ஸ்டார் பவுன்ஸ் போன்ற வீடியோ கேம்களை முயற்சிக்கலாம்.
இதனிடையே, Netflix மற்றும் TikTok போன்ற பிற வீடியோ ஸ்ட்ரீமிங் தளங்களும் கேமிங்கைப் பரிசோதித்து வருகின்றன. இந்த சூழலில் யூடியூப் நிறுவனமும் கேமிங் துறையில் காலடி எடுத்து வைக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
youtube playables, Youtube App, Video games in Youtube, Playables, Glowing Youtube Button, youtube games, online Youtube Games, Google online gaming service