'Shorts' செயலியில் வீடியோ வெளியிட்டால் மாதம் ரூ. 7 லட்சம் - YouTube அறிவிப்பு!
ஷார்ட்ஸ் செயலியில் வீடியோக்களை வெளிட்டு மாதம் ரூ.7 லட்சத்திற்கு மேல் சம்பாதிக்கலாம் என YouTube நிறுவனம் அறிவித்துள்ளது.
டிக்-டாக் போல குறுகிய வீடியோக்களை பதிவிடுவதற்காக YouTube நிறுவனம் அறிமுகப்படுத்திய ஒரு பிரிவு தான் 'Shorts'.
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போல யூடியூபில் இயங்கி வரும் இந்த ஷார்ட்ஸ் விடியோக்கள் பிரபலமானவை. 30 வினாடிகள் கொண்ட விடியோவை மட்டுமே அதில் பதிவிடமுடியம்.
தற்போது பிரத்தியோகமாக யூடியூப் ஷார்ட்ஸ் செயலி இயங்கிவருகிறது. அதில் விடியோ பதிவிட்டு அது அதிக பார்வையாளர்களைப் பெற்றால், மாதம் 100 முதல் 10,000 டொலர்கள் வரை, அதாவது இந்திய மதிப்பில் தோரியமாக ரூ. 7.4 லட்சம் வரை ஒருவரால் ஈட்டமுடியம் என யூடியூப் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.
மேலும் 2021-2022ஆம் ஆண்டிற்கு 100 மில்லியன் டொலர்களை ஷார்ட்ஸ் செயலிக்காக யூடியூப் நிர்வாகம் நிதி ஒதுக்கியிருக்கிறது.
இதில் மாதம் அதிக பார்வையாளர்களை ஈர்த்த 1000 திறமையாளர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களின் காணொலி எத்தனை முறை பார்க்கப்பட்டிருக்கிறது என்கிற அடிப்படையில், இந்திய மதிப்பில் ரூ.74,000த்திலிருந்து ரூ. 7.4 லட்சம் வரை வழங்கப்பட இருக்கிறது என்பதை யூடியூபின் தலைமை வர்த்தக நிர்வாகி ராபர்ட் கின் தெரிவித்திருக்கிறார்.
மேலும், அவர் படைப்பாளர்கள் வெளியிடும் விடியோக்களைக் காண மாதம் ஒரு தொகை வைத்து பார்வையாளர்களைத் தங்கள் கணக்கை பின் தொடரச் செய்வதன் மூலம் வருவாயை ஈட்டிக்கொள்ளலாம் என்றும், சூப்பர் சாட் என்கிற அமைப்பில் தங்களுடைய பார்வையாளர்களிடம் நேரடியாக பேசிக்கொள்வதன் மூலமும் வருவாயை பெருக்கலாம் என்றும் தெரிவித்திருக்கிறார்.