உங்கள் YouTube சேனலுக்கு subscribers வேகமாக உயர என்ன செய்யனும் தெரியுமா?
உலகளவில் யூ டியூப் பயன்படுத்துவபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த தளத்தில் வீடியோ மற்றும் ஷார்ட்ஸ் பகிர்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.
சரி யூ டியூப்பில் சப்ஸ்கிரைபர்கள் எண்ணிக்கையை விரைவாக அதிகப்படுத்துவது எப்படி?
யூ டியூப்பில் பிரபலமாக இருக்க நீங்கள் அடிக்கடி லைவ் செய்ய வேண்டும். மக்களுடன் பேச வேண்டும். அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். கருத்துகளையும், விமர்சனங்களையும் பரிமாறிக் கொள்ள வேண்டும்.
bgr
உலகளவில் உள்ள மக்கள் ஷார்ட்ஸ் வீடியோக்களை அதிகம் விரும்புகின்றனர். நீங்கள் எந்த வீடியோவை பதிவிட்டாலும் அதன் பார்வையாளர்களின் எண்ணிக்கை கோடிகளில் உள்ளது. மிக மிக குறுகிய வீடியோவாக இருப்பதால், மக்கள் எளிதாக ஸ்க்ரோல் செய்து சிறிய கிளிப்களைப் பார்க்கிறார்கள்.
மக்கள் பார்க்கவும் கேட்கவும் விரும்பும் வீடியோக்களை பதிவிடுவது முக்கியம். அந்த கன்டென்ட் மக்களுடன் நேரடியாக தொடர்புடையதாகவும், பிரச்சனையை வெளிப்படையாக பேசுவதாகவும் இருப்பது அவசியம். நகைச்சுவையை பொறுத்தவரை மிகவும் விரும்பிப் பார்க்கும் கன்டென்டாக இருக்கிறது என்பதையும் மறவாதீர்கள்.
மேலே கூறப்பட்ட விடயங்களை தொடர்ந்து செய்தால் வெகுவிரைவாக சப்ஸ்கிரைபர்கள் அதிகரிப்பதை காண முடியும்.
indianexpress