100 முட்டைகளை பச்சையாக குடித்து சாதனை படைத்த பிரபல யூடியூபர் (வீடியோ)
வின்ஸி லானோனி என்ற யூடியூபர் 100 முட்டைகளை பச்சையாக உடைத்துக் குடித்து, அண்மையில் வெளியிட்ட வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.
வின்ஸி அடிப்படையில் ஒரு பாடி பில்டர். ஃபாலோயர்ஸை ஈர்ப்பதற்காக சில தருணங்களில் விபரீத முயற்சிகளிலும் வின்ஸி ஈடுபடுவது உண்டு.
யூடியூப் சப்ஸ்கிரைபர்ஸ் எண்ணிக்கை 1 லட்சம் எட்டியதை கொண்டாடும் வகையில், ஜிம்மில் ஒரே நேரத்தில் 100 முட்டைகளை பச்சையாக உடைத்து குடிக்க முயன்றார்.
ஒரு பெரிய கண்ணாடிக் குடுவையில் 100 முட்டைகளை பச்சையாக உடைத்து சேர்த்து முட்டையின் மஞ்சள் கரு மற்றும் வெள்ளை கரு அனைத்தையும் குடிக்க ஆரபித்தார்.
வீடியோவின் நேரத்தை இழுப்பதற்காக யூடியூபர்கள் வழக்கமாக மேற்கொள்ளும் வளவளா பேச்சுடன், முட்டைகளை வயிற்றுக்குள் குடிக்க ஆரபித்தார்.
காண்பவர்களுக்கு வயிற்றைப் புரட்டச் செய்யும் வகையில், ஒரு வழியாக முட்டைகளை விழுங்கி முடித்தார். சமூக ஊடகப் பயனர்கள் இதனை பாராட்டுவதோடு, ஒரு சிலர் கண்டிக்கவும் செய்து வருகின்றனர்.
மனித உடலில் ஒரே நேரத்தில் இத்தனை புரதம் சேர்வது ஆபத்தானது என்று பலரும் அக்கறையுடன் அறிவுறுத்தினார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |