ரூ.8 கோடி சம்பளம் வேண்டாம்., வங்கி வேலையை விட்டு ரிஸ்க் எடுத்த பெண் சாதனை!
ஆண்டுக்கு சுமார் ரூ.8 கோடி சம்பளம் கிடைத்த வங்கி வேலையை விட்டு, சொந்த முயற்சியில் இன்று பல மடங்கு சம்பாதித்து வருகிறார் இளம் பெண் ஒருவர்.
ஆர்வமும், சிந்தனையும், புத்திசாலித்தனமும் இருந்தால் முடியாததைக் கூட சாத்தியமாக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளார்.
அவரது பெயர் நிஷா ஷா. லண்டனை தளமாகக் கொண்ட வங்கியாளர் கிரெடிட் அக்ரிகோல் நிறுவனத்தில் இணை இயக்குநராக ஆண்டுக்கு 256,000 டொலர் (இலங்கை பணமதிப்பில் சுமார் ரூ.7.8 கோடி) ஆறு இலக்க சம்பளத்துடன் பணிபுரிந்து வந்தார்.
கிட்டத்தட்ட ஒன்பது வருடங்கள் அந்தப் பணியில் தொடர்ந்தார். ஆனால் அது அவருக்கு திருப்தி அளிக்கவில்லை.
பிறருக்கு உதவி செய்வதன் மூலம் வளர வேண்டும்
அந்த வேலை சவாலானதாகவும், அறிவுப்பூர்வமாக ஊக்கமளிப்பதாகவும் இல்லாததால் அவருக்குப் பிடிக்கவில்லை.
மேலும், பிறருக்கு உதவி செய்வதன் மூலம் பொருளாதார ரீதியாக வளர வேண்டும் என்ற மனநிலை அவருக்கு உள்ளது.
தான் செய்யும் வங்கி வேலை என்பது பெருநிறுவனங்களுக்கும் அரசாங்கங்களுக்கும் உதவுவது மட்டுமே என்பதை அவள் உணர்ந்தாள். சாதாரண மக்களுக்கு ஏதாவது உதவி செய்ய விரும்பினாள். அப்படித்தான் அவரது யூடியூப் சேனல் பிறந்தது.
யூடியூப் சேனல்
நிஷா தனது வேலையை ராஜினாமா செய்வதற்கு முன்பு யூடியூப்பைத் தொடங்கினார். ஆனால், 1000 சந்தாதாரர்களின் எண்ணிக்கையை எட்டுவதற்கு ஆரம்பத்தில் அவருக்கு 11 மாதங்கள் பிடித்தன.
செப்டம்பர் 2022-இல் அவர் தனது வாழ்க்கையைப் பற்றிய காணொளியை பதிவேற்றியபோது, அவரது வாழ்க்கை மாறியது. இந்த வீடியோ வைரலானதால், 50,000 சந்தாதாரர்கள் கிடைத்துள்னர்.
இதன்மூலம், யூடியூப்பில் இருந்து மேலும் பணம் சம்பாதித்தார். அப்போதுதான் முழு நேர யூடியூபராக மாற முடிவு செய்தாள். அவர் ஜனவரி 2023-இல் தனது வங்கி வேலையை ராஜினாமா செய்தார்.
ரூ.28 கோடி
அவர் தனிப்பட்ட நிதி தொடர்பான ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை வழங்கும் வீடியோக்களை YouTube இல் உருவாக்கத் தொடங்கினார்.
ஒரு வருடத்திற்குள், அவள் தனது வேலை வாழ்க்கையில் சம்பாதித்ததை விட நான்கு மடங்கு அதிகமாக சம்பாதித்தாள்.
கடந்த ஆண்டு மே முதல் 2024 மே வரை இலங்கை பணமதிப்பில் ரூ.28 கோடி சம்பாதித்ததன் மூலம் தான் எடுத்த முடிவு சரியானது என்பதை நிரூபித்தார்.
இது தனிநபர் நிதி படிப்புகள், தயாரிப்புகள், பிரபலங்களின் நேர்காணல்கள் மற்றும் முன்னணி பிராண்டுகளுடன் கூட்டாண்மை மூலம் இந்த வருமானத்தை அவரப்பி ஈட்டியுள்ளார்.
இப்போது பல இளைஞர்களுக்கு முன்மாதிரியாக இருக்கிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
London, YouTuber, Nischa Shah, content creator, Personal finance YouTuber Nischa Shah