பெண் குழந்தைக்கு தந்தையான யூடியூபர் இர்ஃபான்- வாழ்த்து கூறிய பிரபலங்கள்
சென்னையைச் சேர்ந்த முகமது இர்ஃபான் யூடியூப் சேனல் மூலம் மிகவும் பிரபலமடைந்தவர்.
ரோட்டுக் கடை முதல் உயர்தர 5 ஸ்டார் ஹொட்டல் வரை சமைக்கப்படும் உணவுகளை ருசித்து, மக்களை கவரும் வகையில் விமர்சனம் வழங்குவதில் பெயர் போனவர்.
வெளிநாடுகளுக்கும் சென்று அங்குள்ள உணவகங்களில் சமைக்கப்படும் உணவுகளை ருசித்து விமர்சனம் கொடுத்த இர்பானுக்கு ரசிகர்கள் குவிந்தனர்.
தனித்துவமான மற்றும் ஈர்க்கக்கூடிய விதத்தில் பல வீடியோக்களை அவரது சேனலில் பதிவேற்றி மக்களை மகிழ்வித்து வருகிறார்.
இவர் கடந்து ஆண்டு ஆல்யா என்ற பெண்ணையும் காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.
பிரபல யூடியூபர் இர்ஃபான், திருமணத்திற்கு பிறகு பல்வேறு வீடியோக்களை மனைவியுடன் இணைந்து வெளியிடுவார்.
இர்ஃபானின் மனைவி கர்ப்பமாக இருந்தபோது துபாய்க்கு சென்றிருந்த நிலையில் அங்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு குழந்தையின் பாலினத்தை இணையத்தில் அறிவித்தார்.
கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிவிப்பது இந்தியாவில் சட்டப்பூர்வமாக குற்றம் என்பதால் பெரும் சர்ச்சையாக வெடித்த இந்த விடயத்திற்கு இர்ஃபான் பகிரங்க மன்னிப்பு கேட்டு வீடியோவை வெளியிட்டார்.
இந்த நிலையில், இர்பானுக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது, இது குறித்து தனது இன்ஸ்டாவில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், "தீடீரென்று வாழ்க்கையில் எல்லாமே மாறிவிட்டது, எனக்கு இளவரசி பிறந்திருக்கிறாள், என்ன நல்லது பண்ணேன்னு தெரியல எனக்கு இப்படி ஒரு சந்தோஷம் கிடைச்சிருக்கு..
இந்த அற்புதத்திற்கு உனக்கு என்ன கைமாறு செய்யப்போகிறேன் என்று தெரியவில்லை ஆசிபா.. எங்கள் குடும்பம் வளர்ந்துவிட்டது.. அல்ஹம்துலில்லாஹ்.." என்று பகிர்நதுள்ளார்.
மேலும், பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |