கூலி வேலையில் கஷ்டப்பட்டு ரூ.250 சம்பாதித்தவர்.., இன்று Youtube -ல் வீடியோ போட்டு லட்சாதிபதி!
தினக்கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை எப்படி பார்த்துக் கொள்வது என்று நினைத்த நபர் ஒருவர் Youtube மூலம் லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்.
Youtube தொடங்கிய கூலித்தொழிலாளி
இந்திய மாநிலமான ஒடிசாவைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஐசக் முண்டா (isak munda). இவர், தினமும் கூலி வேலைக்கு சென்று ரூ.250 சம்பாதித்தார். அப்போது, கொரோனா காலம் என்பதால் திடீரென தனது வேலையை திடீரென இழந்துள்ளார்.
அந்த நேரத்தில் Youtube -ல் வீடியோ தயாரித்து பணம் சம்பாதிக்கலாம் என்று கேள்விபட்டுள்ளார். அதனை முயற்சி செய்து பார்க்கலாம் என்றும் isak munda நினைத்துள்ளார். பின்னர் எதார்த்தமாக பரம்பரியமான ஒடியா உணவுகளை வீடியோக்களாக தயாரித்து Youtube -ல் பதிவேற்றம் செய்தார்.
பருப்பு, கீரைகள், தக்காளி மற்றும் மிளகாயுடன் சாதம் சாப்பிடுவதை வீடியோவாக உருவாக்கி பதிவேற்றம் செய்தார் ஆனால், இந்த வீடியோ எதிர்பார்த்த அளவுக்கு Views வரவில்லை.
இதனையடுத்து, ஒடிசாவில் பிரபலமான புளித்த அரிசி உணவான பாசி பகலாவை சாப்பிட்ட வீடியோ ஒன்று வைரலானது. அதன்மூலம் 20,000 சந்தாதாரர்களைப் பெற்றார்.
மாதத்திற்கு ரூ.3 லட்சம்
இவரது வீடியோக்கள் அமெரிக்கா, பிரேசில், மங்கோலியா போன்ற நாடுகளில் பார்ப்பது அதிகமாக இருந்தது. இவரை மன்கி பாத்தில் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
தனது வீடியோக்களை உருவாக்குவதற்காக லேப்டாப் மற்றும் செகண்ட் ஹேண்ட் காரை வாங்கியுள்ளார். தற்போது, இவரது வீடியோக்கள் சிறப்பாக செயல்படுவதால் மாதத்திற்கு ரூ.3 லட்சம் சம்பாதித்து வருகிறார். இவரது வீடியோக்களை மக்களும் ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |