மஞ்சள் அட்டை காட்டிய நடுவருக்கு அதிர்ச்சி கொடுத்த வீரர்! சிரிப்பலை உண்டாக்கிய வைரல் வீடியோ
நிதி திரட்டுவதற்காக நடத்தப்பட்ட கால்பந்து போட்டியில் மஞ்சள் அட்டை காட்டிய நடுவரிடம், யூனோ ரிவர்ஸ்டு அட்டையை வீரர் ஒருவர் நீட்டிய தருணம் சிரிப்பை ஏற்படுத்தியது.
நிதி திரட்ட நடந்த போட்டி
லண்டனில் Sidemen தொண்டு கால்பந்து போட்டி நடந்தது. இதில் sidemen fc அணி 8-5 என்ற கோல் கணக்கில் Youtube All-Stars அணியை வீழ்த்தியது.
இந்தப் போட்டியின் ஒரு கட்டத்தில் Youtube அணி வீரர் மேக்ஸ் போஷ் தவறிழைத்ததற்காக, கள நடுவரான மார்க் கிளாடென்பார்க் மஞ்சள் அட்டை கொடுத்தார்.
உடனே மேக்ஸ் போஷ் Uno ரிவர்ஸ்டு அட்டையை நடுவரிடம் காட்ட அவர் ஒரு கணம் திகைத்து போனார்.
Max Fosh uno reversing Mark Clattenburg?? pic.twitter.com/PtFaugHmp0
— ???????? ????? ? (@sitanshusaran) September 9, 2023
வைரல் வீடியோ
ஏனெனில், Uno ரிவர்ஸ்டு என்பது ஒன்லைனில் விளையாடப்படும் கார்டு விளையாட்டின் திசை தலைகீழாக மாறுவதை காட்டுவதாகும்.
யூடியூபரான மேக்ஸ் போஷின் இந்த செயல் மைதானத்தில் நகைப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Respect the meme, ref pic.twitter.com/GycMpPHX7a
— Max Fosh (@max_fosh) September 9, 2023
இந்தப் போட்டியின் மூலம் பல தொண்டு நிறுவனங்களுக்காக 2.4 மில்லியன் பவுண்டுகளுக்கும் அதிகமாக திரட்டப்பட்டது.
https://www.givemesport.com/sidemen-charity-match-mark-clattenburg-has-yellow-card-hilariously-uno-reversed/ |