27 வயதில் ரூ.8500 கோடி சம்பாதித்த யூடியூபர் - வெற்றிக்கான ரகசியத்தை பகிர்ந்த மிஸ்டர் பீஸ்ட்
வீடியோ பகிரும் தளமான Youtube, உலகில் பலருக்கும் பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்பை வழங்குகிறது.
கடந்த 3 ஆண்டுகளில் இந்தியர்கள் யூடியூப் மூலம், ரூ.21,000 கோடி சம்பாதித்துள்ளனர்.
பில்லியனரான யூடியூபர்
இதே போல், யூடியூபர் ஒருவர் யூடியூப் மூலம் பணம் சம்பாதித்து 27 வயதில் உலக கோடீஸ்வரர் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.
மிஸ்டர் பீஸ்ட் என அழைக்கப்படும் யூடியூபரான ஜிம்மி டொனால்ட்சன், தனது 12 வயதில் MrBeast6000 என்ற பெயரில் யூடியூப் சேனலை தொடங்கி வீடியோக்களை பதிவேற்ற தொடங்கியுள்ளார்.
2017 ஆம் ஆண்டில் பதிவேற்றிய "icounted to 100 000" என்ற வீடியோ மூலம் உலக அளவில் புகழ் பெற்றார்.
தற்போது இவரது யூடியூப் சேனல் 39 கோடி சந்தாதரர்களுடன், உலகளவில் அதிக பேர் பின்தொடரும் யூடியூப் சேனலாக உள்ளது.
இதன் மூலம், மாதத்திற்கு 50 மில்லியன் டொலர்(இந்திய மதிப்பில் ரூ.425 கோடி) வருமானம் ஈட்டி வருகிறார்.
மேலும், MrBeast Burger என்ற பர்கர் நிறுவனம், Feastables என்னும் சாக்லேட் தயாரிப்பு நிறுவனம் ஆகியவற்றை நடத்தி வருகிறார்.
மேலும், Beast Philanthropy என்னும் அறக்கட்டளை மூலம், மரம் நடுவது, பார்வையற்றோர்களுக்கு உதவுவது, கடலில் உள்ள கழிவுகளை அகற்றுவது என பல்வேறு வகையான சமூக சேவைகளை செய்து வருகிறார்.
இறப்பதற்கு முன் தன்னிடம் உள்ள ஒவ்வொரு பைசாவையும் நன்கொடையாக வழங்க உள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளார்.
30 வயதிற்குள் பில்லியன் பட்டத்தை பெற்ற 8வது நபராக MrBeast உருவெடுத்துள்ளார். இதில் இவர் மட்டும் குடும்ப சொத்து எதுவும் இல்லாமல் சுயமாக சம்பாதித்த நபராக உள்ளார்.
வெற்றிக்கான ரகசியம்
purple cow effect தான் தனது வெற்றிக்கான ரகசியம் என பாட்காஸ்ட் ஒன்றில் மிஸ்டர் பீஸ்ட் தெரிவித்துள்ளார்.
அதாவது, சாலையில் நீங்கள் செல்லும் போது ஒரு பசுவை பார்த்தால், சாதாரண பசு என கடந்து செல்வீர்கள். அதுவே ஊதா நிற பசுவை பார்த்தால், அதை ஆச்சரியத்துடன் பார்ப்பீர்கள். உங்கள் நண்பர்களிடம் அது குறித்து சொல்வீர்கள். 2 வருடம்கழித்தும் அதை நினைத்து பார்ப்பீர்கள்.
அது போல சமூக ஊடகங்களில் வீடியோக்களை பார்க்க ஸ்க்ரோல் செய்யும் போது, நீங்கள் முன்னர் பார்த்த வீடியோக்கள் தான் இருக்கும். ஏதாவது பார்க்காத, புதிய ஒன்று இருந்தால் தான் அதை பார்ப்பீர்கள் என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |