YouTube வருமானத்தை விட சொக்லேட் விற்பனையில் அதிக லாபம் ஈட்டும் MrBeast
உலகின் மிகப்பெரிய YouTube நட்சத்திரமான MrBeast (Jimmy Donaldson) தற்போது வீடியோக்களை விட சொக்லேட் விற்பனையிலிருந்து அதிக வருமானம் ஈட்டுகிறார்.
அவரது Beast Industries நிறுவனத்திற்குச் சொந்தமான Feastables சொக்லேட் பிராண்டு கடந்த ஆண்டு 250 மில்லியன் டொலர் வருவாய் மற்றும் 20 மில்லியன் டொலர் லாபம் பெற்றுள்ளது.
இதே சமயத்தில், அவரது மீடியா பிரிவு 80 மில்லியன் டொலர் இழப்பை சந்தித்துள்ளது.
MrBeast தனது YouTube புகழைப் பயன்படுத்தி Lunchly என்ற ஸ்நாக்ஸ் பிராண்டு மற்றும் Viewstats எனும் மென்பொருள் நிறுவனத்திலும் முதலீடு செய்துள்ளார்.
கடந்த நான்கு ஆண்டுகளில் 450 மில்லியன் டொலர் முதலீடு பெற்றுள்ள Beast Industries, மேலும் பல்வேறு துறைகளில் விரிவடைய 200 மில்லியன் டொலர் கூடுதல் முதலீடு தேடுகிறது.
YouTube-ல் வெற்றி பெற MrBeast பெரும் செலவுகளை மேற்கொள்கிறார். ஒரு வீடியோவிற்கே 3-4 மில்லியன் டொலர் செலவாகும்.
இதை சமன்படுத்த Amazon Prime Video-க்காக Beast Games நிகழ்ச்சியை தயாரித்தார், ஆனால் முதல் சீசனில் 100 மில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டது.
இப்போது Beast Industries சொக்லேட், வீடியோ கேம்ஸ், பானங்கள், ஆரோக்கியத் துறை போன்ற புதிய தொழில்கள் நோக்கி நகர்கிறது.
2026-க்குள் Feastables விற்பனை மும்மடங்கு ஆகும் என கணிக்கப்படுகிறது.
MrBeast தனது மீடியா பிரிவை வர்த்தக உற்பத்திகளுக்கான விளம்பர தளமாக பயன்படுத்தி அதிக லாபம் ஈட்டும் வழியை தேர்ந்தெடுத்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
MrBeast (Jimmy Donaldson), Feastables Chocolate, YouTube star MrBeast,