ஒரே நேரத்தில் இரண்டு மனைவிகளும் கர்ப்பம்: இணையத்தில் பதிவிட்ட யூடியூபர்
இந்தியாவின் மாநிலம் தெலங்கானாவில் யூடியூபர் ஒருவர் தனது இரண்டு மனைவிகளும் ஒரே நேரத்தில் கர்ப்பமாகியுள்ளதாக பதிவிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
யூடியூபர் அர்மான் மாலிக்
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் அர்மான் மாலிக். யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வரும் இவர், வாழ்க்கை முறை குறித்த விடயங்களை தினமும் பதிவிட்டு வருகிறார்.
20 லட்சத்திற்கும் அதிகமான Subscriber-களை அர்மான் கொண்டுள்ளார். இந்த நிலையில், இவர் சமீபத்தில் மனைவிகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
ஒரே வீட்டில் இரண்டு மனைவிகள்
கடந்த 2011ஆம் ஆண்டு பாயல் என்ற பெண்ணை திருமணம் செய்த மாலிக், 2018ஆம் ஆண்டு கிருத்திகா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். அதன் பின்னர் அவர் இரண்டு மனைவிகளுடனும் ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வருகிறார்.
ஒரே நேரத்தில் இருவர் கர்ப்பம்
தற்போது அவர் இரண்டு மனைவிகளும் ஒரே நேரத்தில் கர்ப்பமானதாக அறிவித்திருக்கிறார். அத்துடன் அவர்களுடன் எடுத்துக் கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களையும் அதில் வெளியிட்டுள்ளார் அர்மான்.
ஒருபுறம் மாலிக்கிற்கு வாழ்த்துக்கள் வந்தாலும், மறுபுறம் பலரும் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.