யூடியூப் வீடியோவுக்காக காதலருடன் நெருக்கம் காட்டிய பெண்: கணவர் கண்டித்ததால் எடுத்த பயங்கர முடிவு
வேறொரு ஆணுடன் நெருக்கமாக வீடியோ எடுத்ததை கணவர் தட்டிக்கேட்டதால், தன் காதலருடன் சேர்ந்து கணவரைக் கொன்று சாக்கடையில் வீசியுள்ளார் ஒரு பெண்.
கணவர் தட்டிக்கேட்டதால்...
ஹரியானாவைச் சேர்ந்த பிரவீன் என்பவரின் மனைவி ரவீனா (32). யூடியூபுக்காக வீடியோக்கள் எடுப்பவரான ரவீனா, ஒரு கட்டத்தில் வேறு பலருடன் இணைந்து வீடியோக்கள் எடுக்கத் துவங்கியுள்ளார்.
சுரேஷ் என்னும் நபருடன் அவர் நெருக்கம் காட்டவே, பிரவீனும் அவரது குடும்பத்தினரும் ரவீனாவைக் கண்டித்துள்ளனர்.
அதையும் மீறி கணவனுடன் சண்டையிட்டு வீடியோக்கள் எடுத்துவந்துள்ளார் ரவீனா.
ஒரு முறை, வீடியோ ஒன்றிற்காக ரவீனா சுரேஷுடன் மிகவும் நெருக்கமாக இருப்பதைக் கண்ட பிரவீன் அவருடன் சண்டை போட்டுள்ளார்.
சண்டையின்போது, ரவீனா தனது துப்பட்டாவால் பிரவீனின் கழுத்தை நெறித்துக் கொன்றுள்ளார்.
அன்றிரவே, பிரவீனின் உடலை ரவீனாவும் சுரேஷும் கொண்டு ஒரு சாக்கடைக்குள் வீசியுள்ளார்கள்.
மகனைக் காணாமல் பிரவீனின் பெற்றோர் பொலிசில் புகாரளிக்க, மூன்று நாட்களுக்குப்பின் அவரது உடல் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
CCTV காட்சிகளின் அடிப்படையில் பிரவீனின் உடலை ரவீனாவும் சுரேஷும் சாக்கடைக்குள் வீசியதை உறுதி செய்த பொலிசார் ரவீனாவிடம் விசாரிக்கும்போது அவர் தன் கணவரைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.
ரவீனாவும் சுரேஷும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |