இளையராஜா கருத்துக்கு மகன் யுவன் சங்கர் ராஜா பதிலடியா? புகைப்படத்துடன் கவனம் ஈர்த்த வார்த்தைகள்
இசைஞானி இளையராஜாவின் கருத்து விமர்சனத்தை கிளப்பிய நிலையில் அவரது மகனும், முன்னணி இசையமைப்பாளருமான யுவன்சங்கர் ராஜா தெரிவித்துள்ள கருத்து கவனத்தை ஈர்த்துள்ளது.
ப்ளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேஷன் நிறுவனம் 'மோடியும் அம்பேத்கரும்' என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சீர்திருத்தவாதிகளின் கருத்துகளும், செயல்பாட்டாளர்களின் அமலாக்கமும் என்ற தலைப்பில், புத்தகத்தின் முன்னுரையில் இசையமைப்பாளர் இளையராஜா, பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது.
சமூக நீதி விஷயத்தில் பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மோடியின் முத்தலாக் தடை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களைக் கண்டு, அம்பேத்கர் பெருமிதம் கொள்வார். அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இதையடுத்து மோடியை அம்பேத்கருடன் ஒப்பிடுவது முற்றிலும் தவறானது, முரணானது என்றும் சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேவேளையில், இளையராஜா மீதான விமர்சனத்துக்கு எதிராகவும் பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரும், இளையராஜாவின் மகனுமான யுவன் சங்கர் ராஜா சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவு ஒன்று வைரலாகி வருகிறது.
அதில் கருப்பு உடை அணிந்து புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ள அவர், ’கருப்பு திராவிடன் பெருமைமிகு தமிழன்' என குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவு வைரலாகி வருகிறது.
கருப்பு திராவிடன்
— Niranjan kumar (@niranjan2428) April 18, 2022
பெருமைமிகு தமிழன்
யுவன் சங்கர் ராஜா
🖤🖤🖤🖤 pic.twitter.com/JBcSRWXDmZ

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.