அடுத்த ஜென்மத்தில் என்னுடைய ஆசை இது தான்! யுவராஜ் சிங் போட்ட டுவிட்டர் பதிவு
இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரராக இருந்த யுவராஜ் சிங் தன்னுடைய அடுத்த ஜென்ம ஆசை குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்திய அணிக்கு ஒரு காலத்தில் அதிரடி ஆட்டக்காரர் தேவைப்பட்ட போது, அதிரடியாக உள்ளே நுழைந்து பல நேரங்களில் வெற்றியை தேடித் தந்தவர் தான் யுவராஜ் சிங். டி20 மற்றும் 50 ஓவர் உலகக்கோப்பையை வென்றதற்கு யுவராஜ் சிங் ஒரு முக்கிய பங்காற்றினார்.
இதன் காரணமாக இரண்டு உலக கோப்பை தொடர்களிலும், தொடர் நாயகன் விருதை கைப்பற்றினார். இந்திய அணிக்காக ஒரு நாள் மற்றும் டி20 அணிகளில் மிக முக்கிய வீரராக மட்டுமல்லாமல் மேட்ச் வின்னராகவும் ஜொலித்த அவர், இந்திய டெஸ்ட் அணிக்காக 40 போட்டிளில் மட்டுமே விளையாடியுள்ளார்.
இந்நிலையில், பிரபல இணையதளம் ஒன்று தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், எந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாட விரும்புகிறார்? என்ற கேள்வியை ரசிகர்களிடம் கேட்டது.
Probably next life! When I’m not 12th man for 7 years ?
— Yuvraj Singh (@YUVSTRONG12) May 21, 2021
அந்த கேள்வியுடன் யுவாராஜ் சிங்கின் புகைப்படத்தையும் இணைத்திருந்தது. இதைக் கண்ட யுவராஜ் சிங், அந்த டுவிட்டருக்கு கீழே, 7 வருடங்களாக அணியில் நான் 12-வது வீரராக இல்லாத பட்சத்தில், என்னுடைய அடுத்த வாழ்க்கையில் அதிகமான டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவேன் என்று பதில் அளித்துள்ளார்.
யுவராஜ் சிங் இந்திய அணிக்கான டெஸ்ட் போட்டியில் 2003-ஆம் ஆண்டு வாய்ப்பு வழங்கப்பட்டது. இருப்பினும் அவர் டெஸ்ட் போட்டிகளில் விளையாட அவருக்கு 2003ஆம் ஆண்டு தான் வாய்ப்பு வழங்கப்பட்டது. 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள யுவராஜ் சிங், 1900 ரன்களுடன் 9 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிராக கடந்த 2012-ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டிக்கு பிறகு அவருக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.