‘மீண்டும் களமிறங்குகிறேன்’ யுவராஜ் சிங் அதிரடி அறிவிப்பு! குதூகலத்தில் ரசிகர்கள்
இந்திய கிரிக்கெட் அணியில் அதிரடி மன்னனாக திகழ்ந்த யுவராஜ் சிங், மீண்டும் கிரிக்கெட்டுக்கு திரும்ப இருப்பதாக அறிவித்துள்ளார்.
2019 ஜூன் மாதம் செய்தியாளர்களை சந்தித்த இந்திய ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து உலகை அதிர்ச்சிக்குள்ளாகினார்.
அதைத்தொடர்ந்து உள்ளூர் கிரிக்கெட்டிலிருந்தும் விலகுவதாக அறிவித்த யுவராஜ், இந்திய ரசிகர்களையும் கலக்கத்தில் ஆழ்த்தினார்.
இதன் பின் பிசிசிஐ-யிடம் அனுமதி பெற்று உலகம் முழுவதும் டி20 லீக் போட்டிகளில் பங்கேற்றார்.
ஆனால், தற்போது யுவராஜ் சிங் மீண்டும் கிரிக்கெட்டுக்கு திரும்ப தயாராக வருவதாக தெரியவருகிறது.
இந்நிலையில், 2022 பிப்ரவரி மாதம் கிரிக்கெட்டுக்கு திரும்புவதாக 39 வயதான யுவராஜ் சிங் சூசகமாக தெரிவித்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் வீடியோவுடன் யுவராஜ் பதிவிட்டதாவது, உங்கள் தலைவிதியை கடவுள் தீர்மானிக்கிறார்.
பொதுமக்களின் கோரிக்கையின் பேரில் பிப்ரவரியில் மீண்டும் களமிறங்குவேன்.
இந்த உணர்வுக்கு நிகர் எதுவும் இல்லை.
உங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும் நன்றி. தொடர்ந்து இந்திய அணிக்கு ஆதரவு கொடுங்கள், இது நம்முடைய அணி மற்றும் ஒரு உண்மையான ரசிகர் கடினமான காலங்களில் தனது ஆதரவை வெளிப்படுத்துவார் என யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.