யுவராஜ் சிங் வாழ்க்கை வரலாறு திரைப்படம்: அமீர்கான் முதல் ஜெயம் ரவி வரை! நடிக்கப்போவது யார்?
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க ஹிந்தி சினிமா முடிவெடுத்துள்ளது.
யுவராஜ் சிங் வாழ்க்கை வரலாற்று திரைப்படம்
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரர்களில் ஒருவரான யுவராஜ் சிங்கின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க இருப்பதாக T-series தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
தோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புட் தனது திறமையான நடிப்பால் நிஜ தோனியையே திரையில் நமக்கு காட்சிப்படுத்தினார்.
அதே போலவே யுவராஜ் சிங் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்திலும் அதுபோன்று நடிப்பை வெளிப்படுத்த கூடிய நடிகரே நடிக்க வேண்டும் என எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
காசா பள்ளிகளில் தஞ்சம் புகுந்த பாலஸ்தீனியர்கள்: குண்டு வீசி தாக்கிய இஸ்ரேல்: அதிகரிக்கும் உயிரிழப்பு
வெளியான நடிகர்கள் பட்டியல்
இந்நிலையில் யுவராஜ் சிங்கின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிக்க வாய்ப்புள்ள நடிகர்களின் பெயர்கள் குறித்த தகவல்கள் கசிந்து வருகின்றனர்.
அதில், அமீர்கான் முதல் தென்னிந்திய திரை நடிகரான ஜெயம் ரவி பெயர் வரை அடிபடுவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக எம்.எஸ் தோனி திரைப்படத்தில் யுவராஜ் சிங்காக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஹெர்ரி டாங்கிரியின் பெயர் இதில் முதன்மையாக இருப்பதாக கூறப்படுகிறது.
இது தவிர யுவராஜ் சிங் முக அமைப்புடன் ஒத்துப்போக கூடிய பாலிவுட் நடிகர் சகிப் சலீம், தென்னிந்திய சினிமா நடிகரான ஜெயம் ரவி ஆகியோரின் பெயர்களும் யுவராஜ் சிங்காக நடிக்க வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே சமயம், ரன்பீர் கபூர், அமீர் கான், ரன்வீர் சிங் ஆகியோரும் யுவராஜ் சிங்கின் உடல் மொழியை சரியான முறையில் வெளிப்படுத்துவார்கள் என கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |