ஆண் குழந்தைக்கு தந்தையான யுவராஜ் சிங் - குவியும் வாழ்த்து
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் மற்றும் மனைவி ஹேசல் கீச் தம்பதியினருக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளது.
இந்திய அணியில் அதிரடி ஆட்டத்துக்கு பெயர் போனவரும், ஆல்ரவுண்டருமான யுவராஜ் மற்றும் நடிகை ஹேசல் கீச் 2016 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி அன்று ஃபதேகர் சாஹிப் குருத்வாராவில் பாரம்பரிய முறையில் திருமணம் செய்துகொண்டனர்.
இந்த தம்பதியினருக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் யுவராஜ் சிங் வெளியிட்டுள்ள பதிவில் l,“கடவுள் எங்களுக்கு ஒரு ஆண் குழந்தையைப் பரிசாக அளித்துள்ளார் என்பதை எங்கள் ரசிகர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும், பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
இந்த ஆசீர்வாதத்திற்காக நாங்கள் கடவுளுக்கு நன்றி கூறுகிறோம், மேலும் குழந்தையை உலகிற்கு வரவேற்கும் போது எங்கள் பிரைவசியையும் நீங்கள் மதிக்க விரும்புகிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.