மீண்டும் பழைய ஆட்டம்! நான்கு பந்துக்கு நான்கு சிக்ஸர் பறக்க விட்ட யுவராஜ் சிங்! தென் ஆப்பிரிக்கா லெஜண்ட்ஸ் தோல்வி
சாலை பாதுகாப்பு வேர்ல்ட் டி20 தொடரில் தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான ஆட்டத்தில், இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் நான்கு பந்துகளுக்கு நான்கு சிக்ஸர் தொடர்ந்து அடித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
இந்தியாவில் சாலை பாதுகாப்பு வேர்ல்ட் டி20 என்ற தொடர் கடந்த சில ஆண்டுகளாகவே, ஆண்டுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது.
அதன் படி ஒவ்வொரு நாட்டில் இருக்கும் மூத்த மற்றும் ஓய்வு பெற்ற வீரர்கள் இந்த தொடரில் கலந்து கொள்வர்.
அதன் படி இந்தியா லெஜண்ட், இங்கிலாந்து லெஜண்ட்ஸ், தென் ஆப்பிரிக்கா லெஜண்ட்ஸ், இலங்கை லெஜண்ட்ஸ், அவுஸ்திரேலியா லெஜண்ட்ஸ் போன்ற அணிகளுக் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.
Paji chaaaa gaye @YUVSTRONG12 ??? pic.twitter.com/ND00kW1NoC
— Harbhajan Turbanator (@harbhajan_singh) March 13, 2021
All 6 Sixes from Today's Innings @YUVSTRONG12 ??? #YuvarajSingh #INDLvSAL @cricketaakash @Rjkartik pic.twitter.com/whEVA2xHiN
— Inder Singh (@Inderdahiya12) March 13, 2021
அந்த வகையில் நேற்று இந்தியா லெஜண்ட்ஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா லெஜண்ட்ஸ் அணிகள் மோதின, முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில், 3 விக்கெட் இழப்பிற்கு 204 ஓட்டங்கள் குவித்தது.
அதன் பின் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 148 ஓட்டங்கள் எடுத்து 56 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இப்போட்டியில் யுவராஜ் சிங் தொடர்ந்து நான்கு பந்துகளுக்கு நான்கு சிக்ஸர் பறக்கவிட்டார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.