சர்ச்சையான விக்கெட்.. ரோகித் சர்மா துரதிர்ஷ்டத்தை வைத்திருக்கிறார்: யுவராஜ் சிங்
மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா சர்ச்சையான முறையில் ஆட்டமிழந்ததை குறிப்பிட்டு, அவருக்கு துரதிர்ஷ்டம் உள்ளது என இந்தியன் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில், சௌதி வீசிய பந்தில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா ஆட்டமிழந்தார்.
முன்னதாக ரிவ்யூ கேட்கப்பட்டபோது பந்து காலில் பட்டு போனது போல் தெரிந்தது. ஆனால் 3வது நடுவர் ultraedge மூலம் பார்த்தபோது பேட்டில் உரசி சென்றது போல் தெரிந்தது.
இதனால் ரோகித்தின் விக்கெட் சர்ச்சையை கிளப்பியது. அதனைத் தொடர்ந்து பலரும் நடுவரை சமூக வலைத்தளங்களில் விமர்சித்தனர்.
இந்த நிலையில், ரோகித் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங் ட்வீட் செய்துள்ளார். அதில், 'ஹிட்மேன் (ரோகித்) கொஞ்சம் துரதிர்ஷ்டத்தை கொண்டுள்ளார். ரோகித்துக்கு பெரியதாக ஒன்று வந்து கொண்டிருக்கிறது!!! நல்ல இடத்தில் இருக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.
Hitman !! Is having some bad luck . @ImRo45 something big is coming !!!stay in a good space ? #Prediction
— Yuvraj Singh (@YUVSTRONG12) May 10, 2022