42 வயதில் சிக்ஸர் மழைபொழிந்த யுவ்ராஜ் சிங்! 28 பந்தில் 59 ரன் விளாசல் (வீடியோ)
அவுஸ்திரேலிய சாம்பியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா சாம்பியன்ஸ் 86 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
யுவ்ராஜ் சிங்-உத்தப்பா அதிரடி
கவுண்டி மைதானத்தில் நடந்த இப்போட்டியில் முதலில் ஆடிய இந்திய சாம்பியன்ஸ் அணியில் அம்பத்தி ராயுடு (14), சுரேஷ் ரெய்னா (5) சொதப்பினர்.
எனினும் ராபின் உத்தப்பா அதிரடியில் மிரட்டினார். அவருடன் கைகோர்த்த அணித்தலைவர் யுவ்ராஜ் சிங்கும் (Yuvraj Singh) சிக்ஸர் மழை பொழிந்தார்.
அரைசதம் விளாசிய உத்தப்பா 35 பந்துகளில் 4 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 65 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார். பின்னர் வந்த யூசுப் பதானும் ருத்ர தாண்டவம் ஆடினார்.
இதற்கிடையில் 28 பந்துகளில் 59 ஓட்டங்கள் குவித்த நிலையில் யுவ்ராஜ் சிங் அவுட் ஆனார். அவரது ஸ்கோரில் 5 சிக்ஸர், 4 பவுண்டரிகள் அடங்கும்.
YUVRAJ SINGH, KNOCK-OUT, AUSTRALIA. ?
— Johns. (@CricCrazyJohns) July 12, 2024
- The love story for ages...!!!! pic.twitter.com/TgU5poMC5h
பதான் சகோதரர்கள் ருத்ர தாண்டவம்
அடுத்து களமிறங்கிய இர்பான் பதான் அதிரடியாக 19 பந்தில் 50 ஓட்டங்கள் எடுத்து வெளியேற, யூசுப் பதான் அவுட் ஆகாமல் 23 பந்தில் 51 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் இந்தியா சாம்பியன்ஸ் 6 விக்கெட்டுக்கு 254 ஓட்டங்கள் குவித்தது. சிடில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
நம்ப முடியாத 22 வருட பந்துவீச்சில் கவர்ந்தீர்கள்! ஓய்வுபெற்ற ஜிம்மி ஆண்டர்சனுக்கு வாழ்த்து கூறிய ஜாம்பவான்
அதன் பின்னர் களமிறங்கிய அவுஸ்திரேலியா சாம்பியன்ஸ் 7 விக்கெட்டுக்கு 168 ஓட்டங்களே எடுத்து, 86 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.
அந்த அணியில் அதிகபட்சமாக டிம் பெய்ன் 40 (32) ஓட்டங்களும், நாதன் கோல்ட்டர் நைல் 30 (13) ஓட்டங்களும் எடுத்தனர். இந்தியா சாம்பியன்ஸ் தரப்பில் தவால் குல்கர்னி, பவன் நேகி தலா 2 விக்கெட்டுகளும், ராகுல் சுக்லா, ஹர்பஜன் சிங் மற்றும் இர்பான் பதான் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
Yuvraj Singh in the Semi Finals against Australia. ? pic.twitter.com/NXHNxVnvKw
— Mufaddal Vohra (@mufaddal_vohra) July 12, 2024
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |