இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலியாவை சாதாரணமாக நினைக்காதீர்கள்! எச்சரித்த யுவராஜ் சிங்
உலகக்கோப்பை இறுதிப் போட்டி இன்று நடைபெறும் நிலையில், அவுஸ்திரேலியாவை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என முன்னாள் வீரரான யுவராஜ் சிங் எச்சரித்துள்ளார்.
இறுதிப்போட்டி
அகமதாபாத் மைதானத்தில் இன்று நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
2003ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்கு பிறகு 20 ஆண்டுகள் கழித்து இந்தியா - அவுஸ்திரேலியா அணிகள் மோதுவதால், சர்வதேச அளவில் இப்போட்டிக்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
யுவராஜ் சிங்
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் அவுஸ்திரேலியா குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,
'உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் ஆட்டத்தை பார்க்கும்போது அவர்கள் மோசமாக விளையாடவில்லை. இந்திய வீரர்கள் செய்யும் தவறுகளால் மட்டுமே அவர்கள் இந்த உலகக்கோப்பையை இழக்க நேரிடும்.
இந்திய வீரர்கள் தற்போது மிகவும் நம்பிக்கையுடன் உள்ளனர் என்று நான் நினைக்கிறேன். ஆனாலும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான அணி நீங்கள் இலகுவாக எடுத்துக் கொள்ளக்கூடிய அணி அல்ல' என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |