உன்னை நிரூபிப்பதற்கு இதுதான் நேரம் சகோதரா.. ரோகித் சர்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய யுவி!
இன்று பிறந்த நாள் கொண்டாடும் ரோகித் சர்மாவுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவ்ராஜ் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் ரோகித் சர்மா இன்று தனது 35வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு சக வீரர்களும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான யுவ்ராஜ் சிங்கும் வாழ்த்துக்கள் சகோதரா என குறிப்பிட்டு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ள அவர், 'பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோதரா.. நீங்கள் உங்களை நிரூபிப்பதற்கு இதுதான் சரியான நேரம். எப்போதும் போலவே நீங்கள் மைதானத்திற்கு வெளியே (பந்தை) அனுப்ப வேண்டும். இந்த சிறப்பு வாய்ந்த நாளில் உங்களுக்கு அன்பையும், வாழ்த்துக்களையும் அனுப்புகிறேன்' என தெரிவித்துள்ளார்.
Happy birthday brotherman ? this is the time to back yourself and hit it out of the park like you always have ???? Sending you loads of love and good wishes on your special day ❤️? @ImRo45 pic.twitter.com/kpxDGrdBem
— Yuvraj Singh (@YUVSTRONG12) April 30, 2022