அடுத்தடுத்தடுத்து இரண்டு விக்கெட்! தெறித்த மிடில் ஸ்டம்ப்: இலங்கை அணியை மிரட்டிய சஹால்-சஹார் வீடியோ
இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுவேந்திர சஹால் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் தீபக்சஹார் அற்புதமாக பந்து வீசி விக்கெட் எடுத்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது
இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று கொழும்புவில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் ஆடிய இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 275 ஓட்டங்கள் எடுத்தது, இலங்கை அணியில் அதிகபட்சமாக சரீத் அஷலன்கா 65 ஓட்டங்களும், சாமிகா கருணரத்னே 44 ஓட்டங்களும் எடுத்தனர்.
இந்திய அணியில், வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் யுவேந்திர சஹால் மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதைத் தொடர்ந்து இந்திய அணி இலக்கை விரட்டி விளையாடி வருகிறது.
Yuzi Chahal spun a web around the Lankans, claims 2 wickets in 2 consecutive balls! ?
— Sony Sports (@SonySportsIndia) July 20, 2021
Tune into Sony Six (ENG), Sony Ten 1 (ENG), Sony Ten 3 (HIN), Sony Ten 4 (TAM, TEL) & SonyLIV now! ?#SLvINDOnlyOnSonyTen #HungerToWin #Chahal pic.twitter.com/thXqxfZElL
இந்நிலையில், இப்போட்டியின் முதல் ஓவரில் இருந்தே இந்திய அணியின் பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்ட, பெர்னாண்டோ மற்றும் பனுகா கூட்டணி, முதல் விக்கெட்டுக்கு 77 ஓட்டங்கள் சேர்ந்திருந்த போது சாஹல் தனது துல்லியமான பந்துவீச்சால் இந்த கூட்டணியை பிரித்தார்.
போட்டியின் 13-வது ஓவரின் 2வது பந்தில் பனுகாவின் (36) விக்கெட்டை வீழ்த்திய சாஹல், அதற்கு அடுத்த பந்திலேயே பனுகா ராஜபக்சேவின் (0) விக்கெட்டை கைப்பற்றி அசத்தினர்.
How good was that slower ball from Deepak Chahar? ?
— Wisden India (@WisdenIndia) July 20, 2021
Do you think he should be playing ODIs more often?#SLvIND pic.twitter.com/grdQQtL2Is
அதன் பின் இலங்கையின் ரன் விகிதம் குறையத் துவங்கியது. அதுமட்டுமின்றி, வேகப்பந்து வீச்சாளாரன் தீப சஹார், வஹிண்டு ஹசரங்காவை தன்னுடைய துல்லியமான யார்க்கர் மூலம் மிடில் ஸ்டம்பை தெறிக்கவிட்டார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.