யூஸ்வேந்திர சாஹல் - தனஸ்ரீ வர்மா விவாகரத்து: வெளியான ஜீவனாம்சம் ஒப்பந்தம்!

Thiru
in கிரிக்கெட்Report this article
முன்னாள் மனைவி தனஸ்ரீ வர்மா இந்திய கிரிக்கெட் அணி வீரர் யூஸ்வேந்திர சாஹல் ஜீவனாம்சம் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
யூஸ்வேந்திர சாஹல் - தனஸ்ரீ வர்மா விவாகரத்து
இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் யூஸ்வேந்திர சாஹல் மற்றும் அவரது மனைவி தனஸ்ரீ வர்மா ஆகியோரின் விவாகரத்து வழக்கு தற்போது சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது.
வரவிருக்கும் ஐபிஎல் 2025 சீசன் தொடங்குவதற்குள் வரவிருக்கும் ஐபிஎல் 2025 சீசன் தொடங்குவதற்குள் மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜீவனாம்சம் குறித்த தகவல்
ஒப்புக்கொண்ட விதிமுறைகளின்படி, யூஸ்வேந்திர சாஹல் தனஸ்ரீ வர்மாவுக்கு ரூ. 4.75 கோடி நிரந்தர ஜீவனாம்சம் வழங்க ஒப்புக் கொண்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது வரை ரூ. 2.37 கோடி மட்டுமே செலுத்தப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள தொகையை செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
#Breaking Bombay High Court has overturned a Family Court decision that denied the request to waive the statutory cooling-off period for the divorce of cricketer Yuzvendra Chahal and Dhanashree Verma under the Hindu Marriage Act.#BombayHC #YuzvendraChahal pic.twitter.com/5hdwLFEtIM
— Bar and Bench (@barandbench) March 19, 2025
விவாகரத்துக்கான காரணம்
யூஸ்வேந்திர சாஹல் மற்றும் தனஸ்ரீ வர்மா 2020 டிசம்பரில் திருமணம் செய்து கொண்டனர். இருவரின் தனிப்பட்ட காரணங்களால் யூஸ்வேந்திர சாஹல் மற்றும் தனஸ்ரீ வர்மா இருவரும் 2022 ஜூன் முதல் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்த ஆண்டு பிப்ரவரியில் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தனர்.
விவாகரத்துக்கான முக்கிய காரணம் என்னவென்று வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |