யுஸ்வேந்திர சாஹலுக்கு இந்திய அணியில் இடம்பிடிக்க தகுதியில்லை: பாகிஸ்தான் முன்னாள் வீரர் கருத்து
இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்க சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலுக்கு தகுதியில்லை என்று பாகிஸ்தான் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் டேனிஷ் கனேரியா கருத்து தெரிவித்துள்ளார்.
ஆசிய கோப்பைக்கான இந்திய அணி
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30ம் திகதி தொடங்கவுள்ள நிலையில் பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் தங்கள் அணி வீரர்களை அறிவித்துள்ளனர்.
அந்த வரிசையில் சமீபத்தில் ஆசிய கோப்பைக்கான இந்திய வீரர்களின் பட்டியலை இந்திய அணி நிர்வாகமும் வெளியிட்டுள்ளது.
அதில், ரோகித் சர்மா (கேப்டன்) விராட் கோலி, சுப்மான் கில்,ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகமது ஷமி, இஷான் கிஷன், ஷர்துல் தாகூர், அக்சர் பட்டேல், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, பிரசித் கிருஷ்ணா, இவர்களுடன் ஆசிய கோப்பைக்கு பேக்-அப் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சாஹலுக்கு தகுதியில்லை
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியில் யுஸ்வேந்திர சாஹல் தேர்ந்தெடுக்கப்படாதது குறித்து பாகிஸ்தான் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் டேனிஷ் கனேரியா கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அவர், “யுஸ்வேந்திர சாஹலுக்கு தற்போது உள்ள இந்திய அணியில் இடம் பிடிக்க தகுதியில்லை, அவரது சுழற்பந்து நிலையற்றதாக உள்ளது.”
ஆனால் மறுபக்கம் குல்தீப் யாதவ் மிடில் ஓவர்களில் நன்றாக பந்து வீசுவதுடன் தொடர்ச்சியாக விக்கெட்டுகளையும் வீழ்த்துகிறார். எனவே தேர்வாளர்கள் யுஸ்வேந்திர சாஹலுக்கு மாற்றாக குல்தீப் யாதவ் தேர்ந்தெடுத்தது சரியான முடிவு என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |