மது அருந்தும் பழக்கத்தை விட்டு விட்டேன்! மனம் திறந்த யுஸ்வேந்திர சாஹல்
மது அருந்தும் பழக்கத்தை விட்டு விட்டதாக இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் அணியில் யுஸ்வேந்திர சாஹல்
கடந்த 2023ம் ஆண்டு முதல் இந்திய கிரிக்கெட் அணியின் விளையாடும் 15 பேர் குழுவில் இருந்து யுஸ்வேந்திர சாஹல் ஓரங்கட்டப்பட்டார்.
இருந்தும் அவர் ஐபிஎல் தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார், அவர் RCB, MI, RR ஆகிய அணிகளில் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்துள்ளார்.

தற்போது பஞ்சாப் சூப்பர் கிங்ஸ் அணியின் முதன்மை சுழற்பந்து வீச்சாளராக யுஸ்வேந்திர சாஹல் உள்ளார்.
கடந்த சீசனில் பஞ்சாப் அணிக்காக 14 ஆட்டங்களில் விளையாடி 16 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.
மதுப் பழக்கத்தை விட்டு விட்டேன்
2026 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ள நிலையில், சமீபத்தில் ஏபி டிவில்லியர்ஸின் யூடியூப் சேனலுக்கு யுவேந்திர சாஹல் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அதில், கடந்த சீசனில் தனக்கு விலா எலும்பு முறிவு மற்றும் கை விரல் காயம் ஏற்பட்டதன் காரணமாக அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியில் சிறப்பாக “லெக் ஸ்பின்” செய்ய முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

தனக்கு 35 வயதாகிறது, இனி என்னுடைய உடலை நான் நன்கு பார்த்துக் கொள்ள வேண்டும், நான் மது அருந்தும் பழக்கத்தை விட்டு 6 மாதங்கள் மேலாகிவிட்டது.
இந்த சீசனில் முத்த வீரராக சுறுசுறுப்பாக செயல்பட்டு தன்னுடைய 150% பங்களிப்பை பஞ்சாப் அணிக்கு அளிக்க நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |