மலிங்காவுக்கு பின் சாதனை படைத்த சாஹல்!
யுஸ்வேந்திர சாஹல் ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிவேகமாக 150 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
கடந்த சீசனில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடிய சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல், நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
நேற்று நடந்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், அபாரமாக பந்து வீசிய சாஹல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.
நான்காவது விக்கெட்டை அவர் சாய்த்ததன் மூலம் ஐபிஎல்லில் அதிவேகமாக 150 விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது வீரர் என்ற சாதனையை படைத்தார். அத்துடன் ஐபிஎல் தொடரில் 150 விக்கெட்டுகளை கைப்பற்றிய 6வது வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
இதற்கு முன்பு இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான லசித் மலிங்கா இந்த சாதனையை படைத்திருந்தார். அவர் 122 போட்டிகளில் 170 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். சாஹல் 118 போட்டிகளில் 150 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.