இந்திய கிரிக்கெட் அணி நட்சத்திர வீரர் மனைவியின் ரகசிய காதலன்! அவரே பதிவிட்டு வெளியிட்ட புகைப்படம்
யுஸ்வேந்திர சாஹல் மனைவி தனஸ்ரீ வர்மா தனது ரகசிய காதலன் என கூறி வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி வீரர் யுஸ்வேந்திர சாஹலுக்கும், அவரது மனைவி தனஸ்ரீ வர்மாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக சில மாதங்களுக்கு முன்னர் செய்திகள் வெளியாகின.
ஆனால் தாங்கள் பிரியவில்லை என தம்பதி தெரிவித்தனர். இந்த நிலையில் தன்னுடைய ரகசிய காதலன் என கூறி தனஸ்ரீ ஒரு புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்களில், அவர் தனது செல்லக்குட்டி நாயான காபியுடன் இருக்கிறார். காபி என பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த நாய்க்கு அண்மையில் பிறந்தநாள் வந்துள்ளது.
இதனை தான் செல்லமாக என்னுடைய சீக்ரெட் லவ்வர் என கூறி, அந்த நாய்க்குட்டியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
மேலும், என்னுடைய ரகசிய காதலனாக எப்போதும் நீங்கள் இருப்பீர்கள் என்றும் பதிவிட்டுள்ளார்.