காதல் ரசம் சொட்ட! மனைவியுடன் ரொமாண்டிக் வீடியோவை வெளியிட்ட இந்திய கிரிக்கெட் வீரர் சாஹல்
இந்திய கிரிக்கெட் அணி வீரர் யுஸ்வேந்திர சாஹல் தனது மனைவியுடன் காதல் ரசம் சொட்ட ரொமாண்டிக் தருண வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இந்திய அணியின் சீனியர் ரிஸ்ட் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹல். இந்தியாவிற்காக 67 ஒருநாள் மற்றும் 62 டி20 போட்டிகளில் ஆடியுள்ள யுஸ்வேந்திர சாஹல் முறையே 118 மற்றும் 79 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
யுஸ்வேந்திர சாஹல் நடன கலைஞரும், யூடியூப் பிரபலமுமான தனஸ்ரீ வெர்மா என்ற பெண்ணை காதலித்து கடந்த 2020 டிசம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டார்.
சமீபத்தில் தம்பதிகள் பிரிவதாக ஒரு தகவல் பரவிய நிலையில் அதை இருவரும் மறுத்து வதந்திக்கு முற்றுபுள்ளி வைத்தனர். இந்த நிலையில் “என்னுடைய வலிமையான பெண் தான் என் பலம்” என்ற கேப்ஷனுடன் சாஹல் மனைவியுடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அதில் இருவரும் கடற்கரையில் கைகோர்த்து நடப்பது, சேர்ந்து நடனம் ஆடுவது போன்ற ரொமாண்டிக் தருணங்கள் இடம்பெற்றுள்ளன.