ஐபிஎல் ஏலத்தில் இந்த இந்திய வீரர் கோடிகளை குவிப்பார் பாருங்க! உறுதியாக கூறும் பிரபல வீரர்
இந்திய வீரர் சாஹல் ஐபிஎல் ஏலத்தில் பல கோடிகளுக்கு விலை போவார் என ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார்.
விரைவில் நடக்கவுள்ள ஐபிஎல் ஏலத்தில் எந்தெந்த வீரர்களை எந்தெந்த அணிகள் எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது ஐபிஎல் மெகா ஏலம் குறித்துப் பேசியுள்ள முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, சாஹல், மிகவும் நேர்மையாக விளையாடக் கூடியவர். முழு உழைப்பையும் போடுவார்.
இவரை ஆர்சிபி அணி சிறப்பாக நடத்தியிருக்க வேண்டும். அதாவது தக்கவைத்திருக்க வேண்டும். அவர்கள் தவறு செய்துவிட்டார்கள். இவரை அகமதாபாத் அணி தக்கவைக்கும் என தகவல் வெளியாகி வருகிறது.
அப்படி இவரை தக்கவைக்கவில்லை என்றால், மெகா ஏலத்தின்போது அதிக தொகைக்கு ஏலம் போவார். இவர் சாதாரண ஸ்பின்னர் கிடையாது. கிட்டதட்ட அனைத்து போட்டிகளிலும் விக்கெட்டை வீழ்த்தக் கூடியவர். நிச்சயம், பல அணிகள் இவருக்காக போட்டி போடும்.
அவர் கோடிகளை குவிப்பார் பாருங்கள் என கூறியுள்ளார்.