சென்னை சூப்பர் கிங்ஸின் தலைமை பயிற்சியாளராக ஜாகீர் கான் அறிவிப்பு
CSK அணியின் தலைமை பயிற்சியாளராக ஜாகீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜாகீர் கான்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக ஸ்டீபன் ஃபிளெமிங் (Stephen Fleming) 18 ஆண்டுகளாக பணியாற்றினார்.

கடந்த ஜூலை மாதம் ஸ்டீபன் ஃபிளெமிங் தனது பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார்.
இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் (Zaheer Khan) CSK-வின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2017ஆம் ஆண்டில் ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, ஜாகீர் கான் பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார்.
610 விக்கெட்டுகள்
கடைசியாக ஐபிஎல் 2025 தொடருக்காக ஜாகீர் கான் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் Mentor ஆக நியமிக்கப்பட்டார்.
ஆனால், அடுத்த சீசனுக்கு முன்னதாக அந்த அணியில் இருந்து அவர் விலகினார். ஜாகீர் கான் ஐபிஎல் கிரிக்கெட்டில் 100 போட்டிகளில் 102 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
அனைத்து வடிவங்களிலும் சேர்த்து 610 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
