எங்களை விட அவுஸ்திரேலிய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர், ஆனால்..இங்கிலாந்து வீரர் வருத்தம்
இங்கிலாந்து வீரர் ஜக் கிராவ்லே மழையால் வெற்றியை தவறவிட்டதாக 4வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியை குறிப்பிட்டுள்ளார்.
மழையால் டிரா ஆன போட்டி
மான்செஸ்டரில் இங்கிலாந்து - அவுஸ்திரேலியா அணிகள் மோதிய 4வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.
இங்கிலாந்து அணி ஆதிக்கம் செலுத்திய இந்தப் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இதன் காரணமாக கடைசி போட்டியில் இங்கிலாந்து அணி வென்றாலும், டெஸ்ட் தொடர் 2-2 என சமநிலையில் தான் முடியும்.
ஜக் கிராவ்லே வருத்தம்
இதுகுறித்து இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜக் கிராவ்லே கூறுகையில், 'இந்த டெஸ்ட் தொடர் 2-2 என முடிந்தால் நியாயமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன். லார்ட்ஸ் மைதானத்தில் அவர்கள் (அவுஸ்திரேலியா) எங்களை விட சிறப்பாக செயல்பட்டனர். ஓல்ட் டிராஃபோர்டில் நாங்கள் வெற்றிபெற நல்ல நிலையில் இருந்தோம், ஆனால் நாங்கள் ஏமாற்றமடைந்தோம்.
இரண்டு நாட்கள் மழை எங்களுக்கு செலவானது. எனினும் கடைசி டெஸ்டுக்கு நாங்கள் பெரிய அளவில் தயாராக உள்ளோம். எந்த போட்டியாக இருந்தாலும் வெற்றி பெற வேண்டும். இந்த போட்டியை நாங்கள் வென்றிருந்தால் அதைப் பார்ப்பது என்பது மிகவும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும்' என தெரிவித்துள்ளார்.
ஜக் கிராவ்லே மான்செஸ்டர் டெஸ்டில் 189 ஓட்டங்கள் குவித்து ஆட்டநாயகன் விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |