ஜக் கிரேவ்லே சிக்ஸர் மழை! 18.2 ஓவர்களில் 199 ஓட்டங்கள் எடுத்து வெற்றி
டி20 பிளாஸ்ட் போட்டியில் கென்ட் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் சஸ்செக்ஸை வீழ்த்தியது.
டாம் கிளார்க் 79 ஓட்டங்கள்
சஸ்செக்ஸ் மற்றும் கென்ட் அணிகளுக்கு இடையிலான டி20 பிளாஸ்ட் போட்டி செயின்ட் லாரன்ஸ் மைதானத்தில் நடந்தது.
முதலில் ஆடிய சஸ்செக்ஸ் அணி 20 ஓவர்களில் 197 ஓட்டங்கள் குவித்தது. அதிரடியில் மிரட்டிய டாம் கிளார்க் 29 பந்துகளில் 79 ஓட்டங்கள் (6 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகள்) விளாசினார்.
அபாரமாக பந்துவீசிய தியான் ஃபோரெஸ்டர் 3 விக்கெட்டுகளும், கிளாசென், ஃபோர்மேன் மற்றும் மில்னஸ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் ஆடிய கென்ட் அணியில் முயேயே 26 ஓட்டங்களும், டேனியல் பெல் 29 ஓட்டங்களும் விளாசி ஆட்டமிழந்தனர்.
கிராவ்லே 75 ஓட்டங்கள்
ருத்ரதாண்டவம் ஆடிய ஜக் கிராவ்லே (Zak Crawley), ஆட்டமிழக்காமல் 41 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 75 ஓட்டங்கள் விளாசினார்.

தியான் ஃபோரெஸ்டர் 18 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 35 ஓட்டங்கள் விளாச 18.2 ஓவர்களில் 199 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |