ஆஷஸில் அவுஸ்திரேலியாவை அலறவிட்ட இளம் வீரர்: அதிரடியாக 189 ஓட்டங்கள் விளாசல்
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்டில் இங்கிலாந்து வீரர் ஜக் கிராவ்லே 189 ஓட்டங்கள் விளாசினார்.
அவுஸ்திரேலியா ஆல்அவுட்
மான்செஸ்டரில் நடந்து வரும் ஆஷஸ் 4வது டெஸ்டில் அவுஸ்திரேலிய அணி 317 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
அதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி துடுப்பாட்டம் செய்தது. பென் டக்கெட் ஒரு ரன்னில் ஸ்டார்க் ஓவரில் அவுட் ஆனார்.
அதன் பின்னர் களமிறங்கிய மொயீன் அலி அரைசதம் விளாசி வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ஜோ ரூட், தொடக்க வீரர் கிராவ்லேவுடன் இணைந்து வலுவான அடித்தளம் அமைத்தார்.
இருவரும் அதிரடியாக ஓட்டங்களை எடுத்தனர். அபாரமாக விளையாடிய கிராவ்லே 93 பந்துகளில் சதத்தினை எட்டினார். இது அவருக்கு 4வது டெஸ்ட் சதம் ஆகும்.
A fourth Test century, coming in just 93 balls ?
— England Cricket (@englandcricket) July 20, 2023
Take a bow, Zak Crawley! ?
??????? #ENGvAUS ?? | @IGcom pic.twitter.com/25Nah8QBTh
கிராவ்லே 189 ஓட்டங்கள்
மேலும் ஆஷஸில் முதல் சதம் ஆகும். தொடர்ந்து அதிரடி காட்டிய கிராவ்லே 150 ஓட்டங்களை கடந்தார். மறுமுனையில் ஜோ ரூட் 59வது டெஸ்ட் அரைசதத்தை அடித்தார்.
இரட்டைசதத்தினை நோக்கி முன்னேறிய கிராவ்லேவுக்கு 189 ஓட்டங்களில் கிரீன் செக் வைத்தார். அவரது ஓவரில் கிராவ்லே போல்டு ஆகி பெவிலியன் திரும்பினார்.
A devastating innings comes to an end...
— England Cricket (@englandcricket) July 20, 2023
What an incredible knock from Zak Crawley ? #EnglandCricket | #Ashes pic.twitter.com/iyPrQrltlh
ஜோ ரூட் போல்டு
உடேன ஜோ ரூட்டும் 84 ஓட்டங்களில் பரிதாபமாக ஆட்டமிழந்தார். ஹேசல்வுட் வீசிய பந்து மேலெழும்பாமல் தரையுடன் வந்து ஸ்டம்ப்பை பதம் பார்த்தது.
ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுக்கு 384 ஓட்டங்கள் எடுத்தது. கேப்டன் ஸ்டோக்ஸ் 24 ஓட்டங்களுடனும், ஹாரி புரூக் 14 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.
The only way to get him out ?
— England Cricket (@englandcricket) July 20, 2023
Nothing you can do about those, Joe... #EnglandCricket | #Ashes pic.twitter.com/2RYAhrfHcM
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |