ஜேர்மனிக்கு நன்றி தெரிவித்துகொண்ட உக்ரைன் ஜனாதிபதி: இதற்காகத்தான்
சுவிட்சர்லாந்தில் நடைபெற்றுவரும் உலக பொருளாதார கூட்டமைப்பின் உச்சி மாநாட்டின்போது, ஜேர்மனிக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார் உக்ரைன் ஜனாதிபதி.
ஜேர்மனிக்கு நன்றி தெரிவித்துகொண்ட ஜெலென்ஸ்கி
சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற்றுவரும் உலக பொருளாதார கூட்டமைப்பின் உச்சி மாநாட்டின்போது, ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸை சந்தித்தார் உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி.
அப்போது அவர், ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு எதிரான உக்ரைனின் போரில் உதவ ஆயுதங்களை வழங்கிய ஜேர்மனிக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.
உக்ரைனின் வான் பாதுகாப்பை வலுப்படுத்துவதிலும், ஆயிரக்கணக்கான மனித உயிர்களைப் பாதுகாப்பதிலும் ஜேர்மனி செய்த குறிப்பிடத்தக்க பங்களிப்பை உக்ரைன் மதிக்கிறது என்று ஜெலென்ஸ்கி கூறினார்.
ஏறக்குறைய மூன்று ஆண்டுகளாக ரஷ்ய ஆக்கிரமிப்பிற்கு எதிராக தன்னை பாதுகாத்துக்கொள்ள உக்ரைன் போராடி வருகிறது.
அந்தப் போரில், அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக, ராணுவம் மற்றும் மனிதாபிமான உதவிகள் என இரண்டு வகையிலும் உக்ரைனுக்கு உதவுவதில் ஜேர்மனி முன்னிலை வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |