உண்மையான தலைமை நிரூபிக்கப்பட்டுள்ளது! ட்ரூடோவுக்கு நன்றி கூறிய ஜெலென்ஸ்கி
தங்கள் நாட்டை பாதுகாக்க ஆயுதங்கள் வழங்குவதற்கு நன்றி என கனேடிய பிரதமர் ட்ரூடோவுக்கு உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கு கனடாவின் உதவி
உக்ரைனுக்கு போரில் உதவ கனடா NASAMS ஏவுகணைகளை வழங்குவதாக கூறியது. ரஷ்யாவின் சட்டவிரோத மற்றும் நியாயமற்ற படையெடுப்பிற்கு எதிராக வீரத்துடன் போராடும் உக்ரேனியர்களுடன் கனடா ஒற்றுமையாக நிற்கிறது என கனேடிய பாதுகாப்பு அமைச்சர் கூறினார்.
அதனைத் தொடர்ந்து, ட்ரூடோவுக்கு நன்றி கூறி உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி பதிவிட்டார். அவரது பதிவில், 'அன்புள்ள ட்ரூடோ, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்காக உங்கள் உண்மையான தலைமை மீண்டும் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
எங்கள் வான்வெளியைப் பாதுகாக்க எங்களுக்கு உதவியதற்கு நன்றி. கனடாவால் எங்களுக்கு வாங்கப்பட்ட நாசாம்கள் எங்கள் நகரங்களுக்கும், குடிமக்களுக்கும் வலுவான கேடயமாக இருக்கும்' என கூறினார்.
ட்ரூடோ பதில் ட்வீட்
இந்த நிலையில், கனேடிய பிரதமர் ட்ரூடோ அவருக்கு பதிலளித்து ட்வீட் செய்துள்ளார். அவர் தனது ட்வீட்டில், 'உக்ரேனியர்கள் பயமின்றி வாழ தகுதியானவர்கள். உங்களிடம் தேவையான ஆதாரங்கள் உள்ளன என்பதை உறுதிப்படுத்தி கொள்வதை உறுதி செய்வோம்.
ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, நீங்களும் உக்ரேனிய மக்களும் ஜனநாயகத்திற்காக எழுந்து நிற்கும்போது, கனடாவின் அசைக்க முடியாத ஆதரவு உங்களுக்கு எப்போதும் இருக்கும்' என தெரிவித்துள்ளார்.
Ukrainians deserve to live free from fear. We’ll keep making sure you have the resources you need to make sure they can. President Zelenskyy, as you and the Ukrainian people stand up for democracy, you’ll always have Canada’s unwavering support. https://t.co/9tz1dQQ2tJ
— Justin Trudeau (@JustinTrudeau) January 11, 2023