ஒன்பதாவது முறையாக பிரான்ஸ் செல்லும் உக்ரைன் ஜனாதிபதி
உக்ரைன் ஜனாதிபதி, இம்மாதம் 17ஆம் திகதி பிரான்ஸ் செல்ல இருக்கிறார்.
பிரான்ஸ் செல்லும் உக்ரைன் ஜனாதிபதி
உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி பிரான்சுக்கு வருகை தர இருப்பதாக பிரான்ஸ் ஜனாதிபதி மாளிகை தெரிவித்துள்ளது.

ரஷ்ய உக்ரைன் போர் விடயத்தில், பிரான்ஸ் தொடர்ந்து உக்ரைனுக்கு தனது ஆதரவை அளித்துவருகிறது.
இந்நிலையில், உக்ரைனுக்கு ஆதரவளித்துவரும், பிரான்ஸ், பிரித்தானியா தலைமையிலான ’Coalition of the Willing’ நாடுகள் என அழைக்கப்படும் நாடுகள், உக்ரைன் போர் தொடர்பில் அக்டோபர் மாதம் 24ஆம் திகதி சந்தித்து ஆலோசனை நடத்தின.
அந்த சந்திப்பின் தொடர்ச்சியாகவே, இம்மாதம், அதாவது, நவம்பர் மாதம் 17ஆம் திகதி பிரான்ஸ் வர இருக்கிறார் ஜெலன்ஸ்கி.
ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதற்குப் பிறகு ஜெலன்ஸ்கி பிரான்சுக்கு மேற்கொள்ளும் ஒன்பதாவது பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |