ஜேர்மன் நாடாளுமன்றத்தில் மேற்கத்திய தலைவர்களை கடுமையாக விமர்சித்த ஜெலன்ஸ்கி
ஜேர்மன் நாடாளுமன்றத்தில் காணொளி காட்சி மூலம் உரையாற்றிய ஜெலன்ஸ்கி, மேற்கத்திய நாடுகளின் தலைவர்களை கடுமையாக விமர்சித்தார்.
ஜெலன்ஸ்கி உரையாற்ற தொடங்குவதற்கு முன், ஜேர்மனி நாடாளுமன்றத்தில் இருந்த அனைவரும் எழுந்து நின்று கை தட்டி வரவேற்றனர்.
ஜேர்மன் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜெலன்ஸ்கி, படையெடுப்புக்கு முன் உக்ரைன் எல்லையில் ரஷ்ய படைகள் கூடினர், அப்போது மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் மிகவும் மந்தமாக செயல்பட்டனர், ரஷ்யாவைத் தடுக்க போதுமான நடவடிக்கையை முன்னெடுக்கவில்லை.
நீங்கள் அனைவரும் உங்களின் பொருளாதாரம் குறித்து மட்டுமே கவலைப்பட்டீர்கள்.
நேட்டோவில் உக்ரைன் சேர்க்க தயங்குவதை விமர்சித்த ஜெலன்ஸ்கி, இந்த கூட்டணியில் எங்களுக்கு இடமில்லை என்று கூறினார்.
சுதந்திரத்திற்கும் சுதந்திரமின்மைக்கும் இடையில் இப்போது ஐரோப்பாவில் ஒரு சுவர் உள்ளது. இந்த சுவரை ஜேர்மன் அதிபர் தகர்க்க வேண்டும்.
ஜேர்மனி தலைமை ஏற்று, உக்ரைன் மீதான போரை முடிவுக்கு கொண்டுவருமாறு ஜெலன்ஸ்கி வலியுறுத்தினார்.