ஜெலென்ஸ்கி-ஸ்டார்மர் சந்திப்பு! உக்ரைனுக்கான ஆதரவு தொடருமா? டவுனிங் தெருவில் மக்கள் ஆரவாரம்!
உக்ரைனிய பிரதமர் ஜெலென்ஸ்கி இன்று பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மரை டவுனிங் தெருவில் சந்தித்தார்.
ஜெலென்ஸ்கி-ஸ்டார்மர் சந்திப்பு
போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக நேற்று அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கியும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு இடையே வார்த்தை மோதல்கள் வெடித்ததை தொடர்ந்து உக்ரைனுக்கான ஆதரவை ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக உக்ரைனின் மிகப்பெரிய ஆதரவாளரான பிரித்தானியாவுக்கு இன்று உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
லண்டன் வந்தடைந்த உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மரை டவுனிங் தெருவில் சந்தித்தார்.
உக்ரைனுக்கான ஆதரவு தொடரும்!
அப்போது டவுனிங் தெருவில் கூடியிருந்தவர்கள் எழுப்பிய ஆரவாரத்தை குறிப்பிட்டு பேசிய பிரித்தானியா பிரதமர் ஸ்டார்மர், பிரித்தானியா முழுவதும் உங்களுக்கு முழு ஆதரவு உள்ளது, இது இருக்கும் வரை உங்களுடனும், உக்ரைனுடனும் நாங்கள் துணை நிற்போம் என்று ஜெலென்ஸ்கியிடம் தெரிவித்தார்.
மேலும், உக்ரைனின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பின் அடிப்படையிலான அமைதியை அடைவதில் நாம் இருவரும் கொண்டுள்ள முழுமையான மற்றும் அசைய முடியாத உறுதியை பிரித்தானியா கொண்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
UK Prime Minister Asked Zelensky How He Was Feeling. Zelensky Gave a Thumbs-Up
— NEXTA (@nexta_tv) March 1, 2025
Keir Starmer warmly welcomed the Ukrainian president and assured him that the UK stands with Ukraine until the end. People gathered near the Prime Minister’s residence to show their support. pic.twitter.com/qxSMxcSU7C
ஜெலென்ஸ்கி நன்றி
இதற்கு பதிலளித்த உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி போர் தொடங்கியதில் இருந்து இதுவரை ஆதரவு அளித்து வரும் ஸ்டார்மர் மற்றும் பிரித்தானியா மக்களுக்கு நன்றி என தெரிவித்தார்.
தற்போது உக்ரைனிய பிரதமர் ஜெலென்ஸ்கி மற்றும் பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் இருவரும் தனிப்பட்ட சந்திப்பில் முக்கிய பேச்சுவார்த்தை நடத்த சென்றுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |