பள்ளி படிப்பை இடையில் நிறுத்தியவர்...! ரூ.9,150 கோடி சாம்ராஜ்யத்தை நிலை நிறுத்தியது எப்படி?
இந்தியாவை பொறுத்தவரையில் சாத்திக்காட்டும் மக்களில் அதிகமானோர் இருகின்றனர். பள்ளி படிப்பை முடிக்காதவர்களும் லட்ச கணக்கில் சம்பாதித்து வருகின்றனர்.
அந்தவகையில் மேல்நிலைப் பள்ளி இறுதித் தேர்வை எழுதாமல் படிப்பை இடையிலேயே நிறுத்திய ஒருவர் தற்போது ரூ. 20 லட்சம் வரை சம்பாதித்துக் கொண்டு இருக்கிறார்.
படிப்பை இடையில் நிறுத்திய 14 வயது சிறுவன்
பொதுவாகவே அனைத்து பள்ளிகளிலும் குறைவான புள்ளிகளை எடுக்கும் மாணவ மாணவிகளை பொது தேர்வு எழுதுவதற்கு பாடசாலை அனுமதிக்காமல் இருக்கும்.
அப்படியான ஒருவர் தான் நிகில் காமத். இவர் தனது 10 ஆம் வகுப்பில் குறைந்த மதிப்பெண்களை மாத்திரமே பெற்றுக்கொண்டு இருந்ததால் பள்ளி நிறுவனத்தில் இருந்து இவரை இறுதி தேர்வுக்கு செல்ல அனுமதிக்கவில்லை.
இதனால் மனம் தளர்ந்து அவர் இருக்கவில்லை. தனக்கென்று ஒரு சுய தொழிலை செய்ய வேண்டும் என தனது சிறு வயதிலேயே முடிவெடுத்தார்.
14 வயது இருக்கும்போது தொலைபேசினை விற்க தொடங்கினார். அதையடுத்து ரூ.8000 சம்பளத்திற்கு அழைப்பு மையத்தில் (call center) வேலை செய்தார்.
இவர் 2022 முதல் 2023 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குள் ஒரு நாளைக்குக் கிட்டத்தட்ட ரூ.20 லட்சம் சம்பாதிக்க ஆரம்பித்தார்.
2010 இல் நிதி சேவை நிறுவனத்தை ஆரம்பிக்க வேண்டும் என நினைத்து, தனது சகோதரருடன் இணைந்து Zerodha என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார். அந்த நிறுவனமானது தொடங்கிய மூன்று வருடத்தில் ரூ.2000 கோடிக்கு மேல் லாபபத்தை ஈட்டியது.
இந்நிறுவனமானது ஒரு கோடிக்கும் மேலான வாடிக்கையாளர்களை வைத்து, இந்தியாவில் செயல்படும் வர்த்தக மற்றும் முதலீடுகளில் ஈடுபடும் அனைத்து ரீடெய்லர்களின் எண்ணிக்கையில் 15 சதவீத அளவுக்கு வர்த்தகம் செய்கிறது.
பங்கு சந்தையில் முதலீடு செய்ய விரும்பும் புதியவர்களுக்கு உதவியாக இந்நிறுவனம் செயற்படுகிறது. இது முழுவதும் இந்நிய வாடிக்கையாளர்களை கொண்டு செயற்படுவதோடு மட்டுமல்லாமல், வரத்தகத்தை இந்தியாவில் மாத்திரமே செய்து வருகிறது.
2023 ஆம் ஆண்டில் ஜிரோதா நிறுவனத்தின் மதிப்பு 3.2 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு உயர்ந்தது. இந்திய மதிப்பில் ரூ.30,000 கோடியாகும்.
இவரது ஒரு வருடத்திற்கான வருமானம் ரூ. 72 கோடியாகும். கிட்டத்தட்ட ரூ.19.72 லட்சம் வருமானம் கிடைக்கும். இவரது சகோதரருக்கும் அதே அளவும் வருமானம் தான்.
பிற சலுகைகளுடன் சேர்ந்து இருவரது வருவாய் ரூ.195.4 கோடியாகும். நிகிலின் மாதச் சம்பளம் ரூ.6 கோடி.
தற்போது அவரது நிகர சொத்து மதிப்பானது 1.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இந்திய மதிப்பில் ரூ.9,150 கோடி ஆகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |