குட்டி அணியிடம் சொந்த மண்ணிலேயே மரண அடி வாங்கிய அவுஸ்திரேலியா! மொத்தமாக காலி செய்த ஒற்றை வீரர்
அவுஸ்திரேலியா ஏற்கனவே தொடரை கைப்பற்றியிருந்தாலும் கடைசி ஒருநாள் போட்டியில் தனது சொந்த மண்ணில் படுதோல்வி அடைந்துள்ளது
டேவிட் வார்னர் 96 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகளுடன் 94 ஓட்டங்கள் விளாசினார்
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி படுதோல்வி அடைந்தது.
அவுஸ்திரேலியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டவுன்ஸ்வில்லேவில் நடந்தது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய அவுஸ்திரேலிய அணியில் கேப்டன் பின்ச் 5 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து ஸ்மித், கேரி, ஸ்டோய்னிஸ், க்ரீன் ஆகியோர் ஒற்றை இலக்க ஓட்டங்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் தொடக்க வீரர் வார்னர் நங்கூர ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மேக்ஸ்வெல் 19 ஓட்டங்கள் எடுத்து பர்ல் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த அகர் ஓட்டங்கள் எடுக்காமல் பர்ல் பந்துவீச்சில் அவுட் ஆனார். அவுஸ்திரேலிய அணியின் கடைசி 5 விக்கெட்டுகளையும் பர்ல் கைப்பற்றினார். இறுதிவரை போராடிய வார்னர் 94 ஓட்டங்களில் அவுட் ஆகி சதத்தை தவறவிட்டார்.
வார்னர், மேக்ஸ்வெல் தவிர ஏனைய வீரர்கள் ஒற்றை இலக்கங்களில் ஆட்டமிழந்ததால், அவுஸ்திரேலிய அணி 31 ஓவர்களில் 141 ஓட்டங்களுக்கு சுருண்டது. ரியான் பர்ல் 5 விக்கெட்டுக்களையும், பிராட் ஈவன்ஸ் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர். பின்னர் களமிறங்கிய ஜிம்பாப்வே 39 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 142 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
The moment Zimbabwe made history! #AUSvZIM pic.twitter.com/NfGA9zxT4W
— cricket.com.au (@cricketcomau) September 3, 2022
கடைசி வரை களத்தில் நின்ற அந்த அணியின் கேப்டன் சகப்வா 37 ஓட்டங்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்தார். மருமணி 35 ஓட்டங்கள் விளாசினார். அவுஸ்திரேலிய அணியின் தரப்பில் ஹேசல்வுட் 3 விக்கெட்டுக்களையும், ஸ்டார்க், அகர், கிரீன் மற்றும் ஸ்டோய்னிஸ் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
What a grab on the hill! #AUSvZIM pic.twitter.com/A1rL4ngCuE
— cricket.com.au (@cricketcomau) September 3, 2022
David Warner played a lone hand for Australia with the bat today #AUSvZIM pic.twitter.com/xULWOQRrht
— cricket.com.au (@cricketcomau) September 3, 2022
#3rdODI | #AUSvZIM
— Zimbabwe Cricket (@ZimCricketv) September 3, 2022
Match summary ? pic.twitter.com/adV0yt1g94