உலகக்கோப்பையில் 48 பந்துகளில் 82 ஓட்டங்கள் விளாசல்! ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி வாணவேடிக்கை காட்டிய வீரர்
82 ஓட்டங்களுடன் ஒரு விக்கெட் மற்றும் ஒரு கேட்ச் பிடித்த சிக்கந்தர் ரஸா ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்
உலகக்கோப்பையில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ள ஜிம்பாப்வே அணி அடுத்தப் போட்டியில் மேற்கிந்திய தீவுகளை எதிர்கொள்ள உள்ளது
உலகக்கோப்பை தொடரில் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஜிம்பாப்வே அணி 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஹோபர்ட்டில் நடந்த போட்டியில் ஜிம்பாப்வே, அயர்லாந்து அணிகள் மோதின. முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி 7 விக்கெட் இழப்புக்கு 174 ஓட்டங்கள் குவித்தது.
அதிகபட்சமாக சிக்கந்தர் ரஸா 48 பந்துகளில் 82 ஓட்டங்கள் (5 சிக்ஸர், 5 பவுண்டரிகள்) எடுத்தார். அயர்லாந்து தரப்பில் ஜோஷுவா லிட்டில் 3 விக்கெட்டுகளையும், மார்க் அடைர் மற்றும் சிமி சிங் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
Raza to the moon!
— ICC (@ICC) October 17, 2022
We can reveal that this 6 from Sikandar Raza is one of the moments that could be featured in your @0xFanCraze Crictos of the Game packs from Zimbabwe vs Ireland.
Grab your pack from https://t.co/8TpUHbQQaa to own iconic moments from every game. pic.twitter.com/veJGtGm1ja
பின்னர் களமிறங்கிய அயர்லாந்து அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. 5வது விக்கெட்டில் களமிறங்கிய கேம்பர் 27 ஓட்டங்களும், ஜார்ஜ் டக்ரெல், டெலனி தலா 24 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
82 with the bat ?
— ICC (@ICC) October 17, 2022
1/22 with the ball ☝️
Sikandar Raza is the @aramco Player of the Match for his excellent display in #ZIMvIRE ? #T20WorldCup pic.twitter.com/pBaCCYdwt4
கடைசி விக்கெட்டில் மெக்கர்தி 16 பந்துகளில் 22 ஓட்டங்கள் விளாசினார். அயர்லாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 143 ஓட்டங்களே எடுத்ததால் ஜிம்பாப்வே அணி 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஜிம்பாப்வே அணியின் தரப்பில் முசாரபாணி 3 விக்கெட்டுகளையும், ங்கரவா, சடரா தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.