26 பந்துகளில் 65 ஓட்டங்கள்! வெளுத்துக்கட்டிய வீரர்
வங்கதேசத்திற்கு எதிரான டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி வீரர் சிக்கந்தர் ரசா 26 பந்துகளில் 65 ஓட்டங்கள் விளாசினார்.
வங்கதேசம் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ஹராரேவில் நடந்து வருகிறது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஜிம்பாப்வே அணி முதலில் துடுப்பாட்டம் செய்தது.
தொடக்க வீரர்களான சகப்வா (8), எர்வின் (21) ஆட்டமிழந்த நிலையில், மதேவெரே பவுண்டரிகளை விளாசினார். அதிரடி காட்டிய அவர் அரைசதம் கடந்தார். மறுமுனையில் விளையாடிய சீன் வில்லியம்ஸ் 19 பந்துகளில் 33 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அப்போது அணியின் ஸ்கோர் 12.2 ஓவர்களில் 99 ஆக இருந்தது. அப்போது களமிறங்கிய சிக்கந்தர் ரசா வங்கதேசத்தின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினார். அவரது மிரட்டலான ஆட்டத்தினால் ஜிம்பாப்வே அணி 200 ஓட்டங்களை கடந்தது.
PC: Twitter (@ICC)
அரைசதம் அடித்த ரசா 26 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 65 ஓட்டங்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றார். 46 பந்துகளில் 67 ஓட்டங்கள் எடுத்திருந்த மதேவெரே கடைசி கட்டத்தில் ரிடையர் ஹர்ட் முறையில் வெளியேறினார்.
ஜிம்பாப்வே 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 205 ஓட்டங்கள் குவித்தது. அதனைத் தொடர்ந்து வங்கதேச அணி களமிறங்கியுள்ளது.
PC: Twitter (@ZimCricketv)