ஆதரவு கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி கூற முடியாது: கிரிக்கெட் வீரர் வெளியிட்ட வீடியோ
ஜிம்பாப்வே வீரர் ரியான் பர்ல் ரசிகர்கள் ஆதரவு அளித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்
சொந்த மண்ணில் ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றி கூறுவது போதுமானதாக இருக்காது என ஜிம்பாப்வே வீரர் ரியான் பர்ல் கூறியுள்ளார்
கடந்த இரண்டு மாதங்களாக ரசிகர்கள் கொடுத்த ஆதரவுக்கு தங்களால் நன்றி கூறுவது போதுமானதாக இருக்காது என ஜிம்பாப்வே அணி வீரர் ரியான் பர்ல் தெரிவித்துள்ளார்.
இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டி ஹராரேயில் நடந்தது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.
You Zim fans have been absolutely incredible over the last couple months. We can’t thank you enough for the home support. We off to Australia now for a busy couple of months, but we can’t wait to be back home playing infront of you again @CastleCornerZW ?❤️ pic.twitter.com/ENG6ZVBEaR
— Ryan Burl (@ryanburl3) August 23, 2022
இந்த தொடரில் ஜிம்பாப்வே அணியின் ரசிகர்கள் தங்கள் வீரர்களை உற்சாகப்படுத்திக் கொண்டே இருந்தனர். இதுகுறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள ஜிம்பாப்வே வீரர் ரியான் பர்ல்,
'ஜிம்பாப்வே ரசிகர்களாகிய நீங்கள் கடந்த இரண்டு மாதங்களாக நம்பமுடியாத வகையில் ஆதரவு அளித்தீர்கள். சொந்த மண்ணில் உங்களது ஆதரவுக்கு நன்றி கூறுவது போதுமானதாக இருக்காது.
நாங்கள் இப்போது இரண்டு மாதங்களுக்கு அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளதால் பிசியாக இருப்போம். ஆனால் திரும்பவும் சொந்த மண்ணுக்கு திரும்பி, உங்கள் ஆதரவுடன் விளையாடுவதற்கு என்னால் காத்திருக்க முடியாது' என தெரிவித்துள்ளார்.
PC: Twitter