ருத்ர தாண்டவமாடிய இந்திய பேட்ஸ்மேன்கள்! 100 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது T20 போட்டியில் இந்திய அணி 100 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்தியாவின் அபாரமான 234 ஓட்டங்கள்
இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி ஹராரே மைதானத்தில் இன்று நடைபெற்றது./// நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி, 47 பந்துகளில் 8 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகள் உடன் 100 ஓட்டங்கள் விளாசி அசத்தினார்.
Magnificent ?!!
— MANOJ TIWARY (@tiwarymanoj) July 7, 2024
Abhishek Sharma scores a blazing ??-???? ??????? in just his second T20I. All you can do is stand and admire! Sensational innings... ????#AbhishekSharma #T20Is #ZIMvIND pic.twitter.com/3WrVTpoGvB
அபிஷேக் ஷர்மாவுக்கு சர்வதேச டி20 போட்டிகளில் முதல் சதம் இதுவாகும்.
அவரைத் தொடர்ந்து கெய்க்வாட் 47 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 11 பவுண்டரிகளுடன் 77 ஓட்டங்கள் குவித்தார்.
ரிங்கு சிங் 22 பந்துகளில் 5 சிக்ஸர்களை விளாசி 48 ஓட்டங்கள் அதிரடியாக சேர்த்தார்.
இதன் மூலம் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 234 ஓட்டங்கள் குவித்துள்ளது.
How about that for a solid finish! ? ?
— BCCI (@BCCI) July 7, 2024
An unbeaten and quickfire 87-run stand ?
Drop an emoji in the comments below to describe Ruturaj Gaikwad (77* off 47) and Rinku Singh's (48* off 22) partnership
Follow the Match ▶️ https://t.co/yO8XjNpOro#TeamIndia | #ZIMvIND |… pic.twitter.com/oInuoAgmp5
பதிலடி கொடுத்த இந்தியா
கடினமான இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது.
தொடக்க வீரரான இன்னோசண்ட் காயா (Innocent Kaia) 4 ஓட்டங்களில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார்.
இதனை தொடர்ந்து களமிறங்கிய பிரையன் பென்னட்(Brian Bennett) 26 ஓட்டங்களும், லூக் ஜாங்வே(Luke Jongwe) 33 ஓட்டங்களும் குவித்தனர்.
ஜிம்பாப்வே அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் வெஸ்லி மாதேவேரே(Wessly Madhevere) 39 பந்துகளில் 3 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 43 ஓட்டங்கள் குவித்தார்.
இறுதியில் ஜிம்பாப்வே அணி 18.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ஓட்டங்கள் மட்டுமே குவித்து தோல்வியை சந்தித்துள்ளது.
முதல் டி20 போட்டியில் தோல்வியை தழுவி இருந்த நிலையில், இந்த போட்டியில் 100 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணி பதிலடி கொடுத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |