ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய கிரிக்கெட் வீரர்கள்., தடை விதித்த ஜிம்பாப்வே வாரியம்
இரண்டு வீரர்களுக்கு ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் (Zimbabwe Cricket) தடை விதித்துள்ளது.
ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்ததால் ஆல்ரவுண்டர்கள் Wessly Madhevere மற்றும் Brandon Mavuta ஆகியோருக்கு நான்கு மாதங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவர்களின் மூன்று மாத சம்பளத்தில் பாதி குறைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இது ஜனவரி முதல் அமலுக்கு வரும் என வாரியம் தெரிவித்துள்ளது.
ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய மற்றொரு வீரரான Kevin Kasuza ஏற்கனவே அனைத்து கிரிக்கெட் நடவடிக்கைகளிலிருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அவர் விரைவில் ஒழுங்குக் குழு முன் ஆஜராவார். அதன் பிறகு அவருக்கு தடை விதிக்க வாய்ப்பு உள்ளது.
வெஸ்லியும் மாவுதாவும் தற்போது rehabilitationக்கு உட்பட்டுள்ளனர். அங்கு இருவரும் ஜிம்பாப்வே கிரிக்கெட் மருத்துவ ஊழியர்களால் கண்காணிக்கப்படுவார்கள். அங்கு இந்த இரண்டு கிரிக்கெட் வீரர்களும் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
தடை செய்யப்பட்ட அந்த மருந்தைப் பயன்படுத்துவதை ஏற்கனவே நிறுத்திவிட்டனர்.
வெஸ்லி ஜிம்பாப்வேக்காக அனைத்து வடிவங்களிலும் 98 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆல்-ரவுண்டர் தனது கடைசி T20 I அயர்லாந்திற்கு எதிராக டிசம்பர் 10 அன்று சொந்த மண்ணில் விளையாடினார்.
இளம் வீரர் மவுதா 26 ஒருநாள் போட்டிகளில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். இளம் வீரர் கெவினைப் பொறுத்தவரை, அவர் ஏழு டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |