சொந்த மண்ணில் வங்காளதேசம் படுதோல்வி: 9 விக்கெட் வீழ்த்தி மிரட்டிய ஜிம்பாப்பே வீரர்
சில்ஹெட் டெஸ்டில் ஜிம்பாப்பே அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தியது.
முதல் டெஸ்ட்
ஜிம்பாப்பே மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சில்ஹெட்டில் நடந்தது.
முதல் இன்னிங்ஸில் வங்காளதேசம் 191 ஓட்டங்களும், ஜிம்பாப்பே 273 ஓட்டங்களும் எடுத்தன.
பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய வங்காளதேசம் 255 ஓட்டங்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.
இதன்மூலம் ஜிம்பாப்பே அணிக்கு 174 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்பே அணியில் பென் கர்ரன் 44 (75) ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
பென்னெட் அரைசதம்
பின்னர் வந்த வெல்ச் (10), சியான் வில்லியம்ஸ் (9) சொற்ப ஓட்டங்களில் வெளியேற, பிரையன் பென்னெட் அரைசதம் அடித்தார். 81 பந்துகளை எதிர்கொண்ட பிரையன் பென்னெட் (Brian Bennett) 1 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 54 ஓட்டங்கள் விளாசி மிராஸ் ஓவரில் அவுட் ஆனார்.

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன்
அதன் பின்னர் விக்கெட்டுகள் சரிய, வெஸ்லி மாதேவரே நிதானமாக ஆடி (19) அணியை வெற்றி பெற வைத்தார். வங்காளதேச அணியின் தரப்பில் மெஹிதி ஹசன் மிராஸ் 5 விக்கெட்டுகளும், டைஜூல் இஸ்லாம் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுகளும், 2வது இன்னிங்சில் 6 விக்கெட்டுகளும் என மொத்தம் 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஜிம்பாப்பேயின் பிளெஸ்ஸிங் முஸரபாணி (Blessing Muzarabani) ஆட்டநாயகன் விருது பெற்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |